Engal Thangam Review: "எங்கள் தங்கம்” எப்படி இருக்கு? சமந்தாவிற்கு கம்பேக் கிடைக்குமா? பப்ளிக் ரிவ்யூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சமந்தா மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பியிருக்கும் படம் என்பதாலேயே 'எங்கள் தங்கம்' மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் இருந்து சற்று விலகியிருந்த சமந்தா, தற்போது நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை மீண்டும் சந்தித்திருக்கிறார்.

மீண்டும் சமந்தா கூட்டணி

'ஓ பேபி' படத்திற்கு பிறகு சமந்தா - நந்தினி ரெட்டி கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும், படத்தை சமந்தாவே தனது கணவர் ராஜ் நிடிமோருவுடன் இணைந்து தயாரித்திருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. டீசர் மற்றும் டிரெய்லர் வெளியான நாளிலிருந்தே "சமந்தாவின் கம்பேக் படம்" என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை படம் எந்த அளவுக்கு பூர்த்தி செய்கிறது என்பதே தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Engal Thangam Samantha Movie Review

எங்கள் தங்கம் படத்தின் கதை

படத்தின் மையக்கதையாக ஸ்வர்ணா என்ற பெண்ணின் வாழ்க்கை வருகிறது. அமைதியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கடந்த காலம் திடீரென மீண்டும் அவளை துரத்தத் தொடங்குகிறது. அதன்பிறகு அவள் எடுக்கும் முடிவுகள், தனது குடும்பத்தை பாதுகாக்க செய்யும் போராட்டங்கள் என திரைக்கதை நகர்கிறது.

முதல் பாதியில் குடும்பம், உறவுகள், நகைச்சுவை மற்றும் சமந்தாவின் இயல்பான நடிப்பு ரசிகர்களை ஈர்க்கிறது. குறிப்பாக குடும்ப உறுப்பினர்களுடன் அவர் பழகும் காட்சிகள் மற்றும் அப்பாவித்தனமான தருணங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

Engal Thangam Samantha Movie Review

படத்தின் பலம்

படத்தின் மிகப்பெரிய பலமாக சமந்தாவின் நடிப்பே அமைந்துள்ளது. ஒரு பக்கம் எளிமையான குடும்ப பெண்ணாகவும், மற்றொரு பக்கம் தன்னம்பிக்கையுடன் போராடும் பெண்ணாகவும் இரண்டு விதமான பரிமாணங்களை அவர் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகும் தனது நடிப்பு திறன் குறையவில்லை என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் திகந்த் தனது கதாபாத்திரத்தில் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கௌதமி, ஸ்ரீமுகி, மஞ்சுஷா உள்ளிட்டோருக்கும் கதையில் முக்கியமான இடம் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப பின்னணியில் நகரும் காட்சிகள் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளன.

Engal Thangam Samantha Movie Review

இசை

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்தின் முக்கிய அம்சமாக பேசப்படுகிறது. குறிப்பாக சில பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒளிப்பதிவு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களும் படத்திற்கு தரத்தை கூட்டியுள்ளன.

படத்தின் இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் அதிகரிக்கின்றன. சில இடங்களில் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம் என்ற கருத்துகள் வந்தாலும், படத்தை முழுமையாக ரசிக்க முடியாத அளவுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

சமந்தாவின் கம்பேக்

குறிப்பாக சமந்தாவை மீண்டும் பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல திருப்தியை கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது. "இது வெறும் கம்பேக் அல்ல, சமந்தாவின் கம்பீரமான ரீ-என்ட்ரி" என்று சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர்.

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க வந்த சமந்தாவுக்கு 'எங்கள் தங்கம்' ஒரு முக்கியமான படமாக மாறியுள்ள நிலையில், வசூல் ரீதியாகவும் படம் நல்ல தொடக்கத்தை பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மொத்தத்தில், ஃபேமிலி சென்டர் சென்டிமென்ட், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் மற்றும் சமந்தாவின் ஸ்ட்ராங்கான நடிப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள 'எங்கள் தங்கம்', ரசிகர்கள் ஒரு முறை திரையரங்கில் சென்று ரசிக்கக்கூடிய படமாகவே பார்க்கப்படுகிறது. சமந்தாவின் திரும்பி வரவை கொண்டாட விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு சிறப்பு அனுபவமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+