மிட்நைட்டில்.. அரைநிர்வாண கோலத்தில் 30 பெண்கள்.. கூடவே பாய்ஃபிரண்ட்ஸ்.. நம்ம ராயப்பேட்டையில்தான்..!
ரிசார்ட் ஒன்றில் இருந்து இளம்பெண்கள் 30 பேரை சென்னை போலீசார் மீட்டனர்
சென்னை: மதுபோதையில் அரைகுறை ஆடையில், ஆட்டம் போட்ட 30 இளம்பெண்களை போலீசார் ஒரே நேரத்தில் மீட்டுள்ளனர்.. இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது... மேலும் ஹோட்டல்கள், பார்களில் டான்ஸ் நிகழ்ச்சி நடத்த கூடாது என்றும் தடை இருக்கிறது.
ஆனால் இதை சிலர் கடைப்பிடிப்பதில்லை.. குறிப்பாக, சென்னையில் பல இடங்களில் பார் வசதியுடன் கூடிய ரிசார்ட் என்று சொல்லக்கூடிய தனியார் விடுதிகளில் தடையை மீறி, நள்ளிரவு மது விருந்து அதாவது மிட்நைட் பார்ட்டி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பார்ட்டி டான்ஸ்
இந்த பார்ட்டிகளில் அரைகுறை டிரஸ்ஸுடன் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள ராயப்பேட்டை ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் பார் வசதிகளுடன் கூடிய தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் நள்ளிரவில் பார்ட்டி நடப்பதாகவும், இங்கு மது விருந்துகளுடன் பெண்கள் ஆபாச நடனம் மற்றும் குத்தாட்டம் போடுவதாகவும் அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கிறங்கிய பெண்கள்
இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட அந்த ரிசார்ட்டுக்குள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.. அங்கே 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்களின் ஆண் நண்பர்களுடன் டான்ஸ் ஆடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.. எல்லாருமே தண்ணி அடித்துள்ளனர்.. மதுபோதையில் தள்ளாடி கொண்டிருந்திருக்கிறார்கள்.. பெண்கள் அரைகுறை ஆடையில், குடிபோதை தலைக்கேறி மதுமயக்கத்தில் ஆட்டம் போட்டுள்ளனர்.. இவர்கள் டான்ஸ் ஆடுவதற்காக, ஆடியோவை சத்தமாக வைத்துள்ளனர்..

30 இளம்பெண்கள்
போலீசார் உள்ளே நுழைந்ததுமே, அந்த ஆடியோவை நிறுத்தினார்கள்.. இதனால் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் திகைத்து நின்றுவிட்டனர்.. போலீசார் அந்த இடத்தை ஆய்வு செய்ததுடன், நடனமாடிய 30 பெண்களையும் மீட்டனர்... போதையில் இருந்த 30 இளம்பெண்களின் அட்ரஸ், செல்போன் நம்பர் ஆகியவற்றை எழுதி வாங்கிக் கொண்டு அவர்களுக்கு வார்னிங் தந்து, ஆட்டோவில் பாதுகாப்புடன் வீடுகளுக்கும் அனுப்பி வைத்தனர்... பின்னர் போதையில் இருந்த இளைஞர்களையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினார்கள்.

ரிசார்ட் ஓனர்
அதன் பிறகு தடை செய்யப்பட்ட நள்ளிரவு நடன மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்த, அந்த ரிசார்ட் ஓனர், மேனேஜரிடம், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விளக்கம் அளிக்குமாறு போலீசார் சொல்லிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தடை செய்யப்பட்ட இரவு நடன விருந்து நடத்திய தனியார் விடுதி நிர்வாகம் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே நேரத்தில் 30 இளம் பெண்கள் விடுதியில் போதையில் மீட்கப்பட்ட சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications