Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கமலாலயத்தில்" திடீர் நிசப்தம்.. அடுத்த அதிரடியில் பாஜக.. டாப் கியர் போடும் எடப்பாடி.. அப்ப அவர்?

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக அதிகாரப்பூர்வமாக வாழ்த்து சொல்லாதது ஏன் என்ற டவுட் கிளம்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் ஒற்றை தலைமை என்பதை நிரூபிக்க பெரிதும் முயற்சித்தும், அதில் வெற்றியையும் தொட்டுவரும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.. எனினும் கூட்டணி கட்சிகளின் ரியாக்‌ஷன்களும் கவனம் பெற்றுள்ளன.

நடக்க போகும் இடைத்தேர்தலைவிட, அடுத்து வரவுள்ள எம்பி தேர்தலையே பாஜக பிரதான கருதுகிறது.. இதை முன்னிறுத்திதான், இந்த முறை எடப்பாடி தரப்பை கூல்செய்து, இடைத்தேர்தலிலும் ஆதரவு தந்துள்ளது.

பாஜகவை பொறுத்தவரை, அதிமுகவின் வாக்கு வங்கி மீது மட்டுமே பிரதான குறியை வைத்துள்ளது.. திமுகவைவிட அதிக வாக்கு வங்கியை அதிமுக காலம்காலமாக தக்க வைத்து வருகிறது.

ராஜன்செல்லப்பா

ராஜன்செல்லப்பா

இந்த வாக்கு வங்கியை சிந்தாமல் சிதறாமல் அள்ள, ஒருங்கிணைந்த அதிமுக என்பது தேவையாக இருக்கிறது.. எம்பி தேர்தல் நெருங்கி வரும்சூழலில், இந்த விஷயத்தைதான் இனி பாஜக கையில் எடுக்கும் என்கிறார்கள்.. முக்குலத்தோர் வாக்குவங்கியை பெறுவதற்காகவே, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு போன்றோரை நம்பி எடப்பாடி இருந்தாலும், ஒட்டுமொத்த சமுதாய வாக்குகளையும் எடப்பாடியால் பெற்றுவிட முடியுமா? என்பது சவாலாக உள்ளது.. இந்த சந்தேகம் பாஜகவுக்கும் இருப்பதாக தெரிகிறது..

புள்ளிகள்

புள்ளிகள்

அதுமட்டுமல்ல, கடந்த சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்ததையும் பாஜக கவனத்தில் கொண்டுள்ளது. எனவே, ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால் மட்டுமே, தென்மண்டலங்களில் தங்களால் காலூன்ற முடியும் என்பதை பாஜக நன்கு உணர்ந்துள்ளது.. அந்தவகையில், ஓபிஎஸ் + டிடிவி தினகரன் + சசிகலா என்ற புள்ளிக்குள் எடப்பாடியை கொண்டுவந்து இணைக்கும் முயற்சியை இனி பாஜக தொடங்கவும் வாய்ப்பு நிறையவே இருக்கும் என்கிறார்கள். இதை ஓபிஎஸ், தினகரன் தரப்பும் நன்றாகவே உணர்ந்துள்ளதாம். அதனால்தான், இதுவரை பாஜக சம்பந்தமாக, எந்த கருத்தையும் , விமர்சனத்தையும் ஓபிஎஸ் டீம் முன்வைக்காமல் உள்ளதாம்.

ஒரே மாஸ் குடை

ஒரே மாஸ் குடை

எம்பி தேர்தலையொட்டி, தங்களை பாஜகவால் எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிலும் ஓபிஎஸ், தினகரன் தரப்பு இருப்பதாக தெரிகிறது.. ஆனால், நேற்றையதினம்கூட எடப்பாடி மதுரை கல்யாணத்தில் பேசும்போது, "ஒருசிலரை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம்" என்று சொன்னதில், அவரது பிடிவாதம் மேலும் அதிகமாகவே தென்பட்டதை கவனிக்க முடிந்தது.. அந்தவகையில், எடப்பாடி + ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி இவர்களை எல்லாம் ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் மிகப்பெரிய சவால் பாஜகவுக்கு தற்சமயம் உள்ளது.

நம்பர் 1

நம்பர் 1

நேற்றைய தினம், தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட கட்சியை தன் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதை அதிமுகவினர் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.. இந்த தீர்ப்பு வெளியானதுமே, எடப்பாடி டீமுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவியும் என்று கணிக்கப்பட்ட நிலையில், பெரிதாக ரியாக்‌ஷன் அரசியல் களத்தில் தென்படவில்லை என்றே தெரிகிறது.. அதிலும் பாஜக இதுவரை எந்த கருத்தையும் சொல்லாமல் உள்ளதாம்.. கூட்டணியில் உள்ள கட்சிகளையும்தாண்டி, முதல்நபராக எடப்பாடிக்கு வாழ்த்து சொல்லி ட்வீட் போட்டிருந்தார் விசிக திருமாவளவன்..

திருமா நறுக்

திருமா நறுக்

"அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக'வை சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே" என்று பதிவிட்டதுடன், போகிற போக்கில் சைஸாக எடப்பாடிக்கு ஒரு அலர்ட்டையும் தந்துவிட்டு போனார்.. ஈரோடு கிழக்கு தொகுதியை மனமுவந்து விட்டுத்தந்த ஜிகே வாசனும், எடப்பாடிக்கு வாழ்த்தை சொல்லி இருந்தார்.. அதுபோல இந்த முறையும் எடப்பாடிக்கு தொலைபேசி மூலம் தமிழக பாஜக வாழ்த்து சொல்லி இருக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை. அதேபோல, பாஜக ஆதரவு கட்சிகளும் வெளிப்படையான வாழ்த்து பதிவுகளை வெளியிடவில்லை என்றே தெரிகிறது.

பறந்தபோன்

பறந்தபோன்

ஆனால், பாஜகவிடமிருந்து அதிகாரபூர்வமாக வாழ்த்து செய்தி இதுவரை வெளியாகாமல் உள்ளதாக கூறுகிறார்கள். இடைக்கால பொதுச்செயலாளராக அன்று எடப்பாடி வெற்றி பெற்றபோது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எடப்பாடிக்கே போனை போட்டு வாழ்த்தியதாக செய்திகள் வந்த நிலையில், இப்போதும் அப்படி எடப்பாடிக்கு போனை போட்டு வாழ்த்து சொல்லியிருப்பாரா? என்று உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை ஓபிஎஸ் நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வெளியானது பாஜகவுக்கு உடன்பாடில்லையா? அல்லது எடப்பாடியின்கீழ் கிட்டத்தட்ட மொத்த அதிமுகவுமே கைக்குள் சென்றுள்ளதில் மகிழ்ச்சி இல்லையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் இணையவாசிகள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

மேஜர் டவுட்

மேஜர் டவுட்

எனினும், தற்போது நடக்க போகும் இடைத்தேர்தலில் எடப்பாடி டீமுக்காக, தமிழக பாஜக ஆதரவு தந்திருந்ததுடன், ஈரோட்டிற்கே சென்று பிரச்சாரமும் மேற்கொண்டிருந்தார் அண்ணாமலை.. எனவே, எடப்பாடியுடன் நல்ல புரிதலிலேயே தமிழக பாஜக தற்சமயம் உள்ளதை மறுக்க முடியாது.. இடைத்தேர்தலில் தங்களை நடத்திய விதத்தை கண்டு, ஓபிஎஸ் டீமே கடுப்பாகி, அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் போடும் அளவுக்கு, எடப்பாடியிடம் ஆதரவு அலையை அண்ணாமலை தரப்பு வீசியிருந்ததையும் மறுக்க முடியாது.. எனினும், தீர்ப்பு தொடர்பாக எடப்பாடிக்கு கிடைத்த வெற்றி குறித்து, தமிழக பாஜகவின் மவுனம்தான் பலரையும் உற்றுநோக்க வைத்து வருகிறது.. பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+