இதுதான் கண்டிஷன்! துணை முதல்வர் ஆவதற்கு.. உதயநிதி சொன்ன "பயங்கர" நிபந்தனை? இப்படி ஒரு முடிவா!
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது.. பெரிய அளவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டாலும் துணை முதல்வர் பதவி உருவாக்கப்படாது என்கிறார்கள் தமிழக அரசியல் வட்டாரத்தினர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு விதித்த நிபந்தனைதான் காரணம் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பெரும்பாலும் விரைவில்.. சில நாட்களில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கான லிஸ்டை உருவாக்கியது உதயநிதி ஸ்டாலின்.. அதை டிக் அடித்தது ஸ்டாலின் என்கிறார்கள். விரைவில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளார். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடு செல்வது, 2026 சட்டசபை தேர்தல், ஆட்சி அதிகாரத்தில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் பயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாம்.
துணை முதல்வர்: விரைவில் மொத்தமாக பெரிய அளவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டாலும் துணை முதல்வர் பதவி உருவாக்கப்படாது என்கிறார்கள் தமிழக அரசியல் வட்டாரத்தினர். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரவின. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
உதயநிதி மனநிலை என்ன?: உதயநிதியே துணை முதல்வர் பதவி வேண்டாம் என்ற மனநிலையில்தான் உள்ளாராம். விளையாட்டுத் துறை அமைச்சர் பதவிக்கே ஏகப்பட்ட போன்கால்கள், அதிகாரிகள் மீட்டிங் என நேரம் விரையமாவதால், துணை முதல்வரானால் 90 சதவீத முதல்வர் பணிகளை செய்ய வேண்டிய நிலை வருவதை அவரே ரசிக்கவில்லையாம். அதோடு தற்போது மாவட்ட செயலாளர்கள் 20 பேர் வரை சீனியர்கள். அதாவது முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்து ஆட்கள். இவர்கள் முதல்வர் ஸ்டாலின் பேச்சை கேட்பார்கள்.. ஆனால் உதயநிதி பேச்சை கேட்பது சந்தேகம்தான்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இவர்களை மாற்ற வேண்டும்.. அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்று உதயநிதி கோரிக்கை வைத்துள்ளாராம். அவர்கள் மாற்றப்பட்டால்தான் தனக்கு முழு அதிகாரம் கிடைக்கும் என்று உதயநிதி நிபந்தனை வைத்துள்ளாராம்.
பேசவில்லை: தமிழக அமைச்சரவை கூட்டம் சமீபத்தில்தான் நடந்தது. இதிலும் துணை முதல்வர் பதவி பற்றி முடிவு எடுக்கப்படவில்லை. உதயநிதி அமைச்சரானதற்கு பிறகு அவரில்லாமல் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் இது தான். வெளிநாட்டில் இருந்ததால் அவர் வரவில்லை. ஏற்கனவே போடப்பட்ட பயணத் திட்டம் என்பதால் அதை ரத்து செய்துவிட்டு திரும்ப முடியவில்லை.
இதனை முதல்வர் ஸ்டாலினிடம் உதயநிதி தெரிவித்து விட்டார் என்கிறார்கள். இந்த அமைச்சரவை கூட்டத்தில் தொழில் துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர்களிடம் தனி தனியாக 15 நிமிடம் மட்டுமே பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் பதவி உள்ளிட்டவைகள் அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் ஆலோசனை செய்யவிருக்கிறார் என்று பரவலாக சொல்லப்பட்டது. ஆனால், இது குறித்த எந்த விவாதமும் அங்கு நடக்கவில்லை.
வெளிநாட்டு பயணம்: தனது வெளிநாடு பயணத் திட்டம் பற்றி மட்டுமே முதல்வர் வெளிப்படுத்தினார். அதுவும் அட்வைஸ் பண்ணுகிற தொணிதான் இருந்தது. எங்கிருந்தாலும் எனது சிந்தனையும் நினைப்பும் உங்களைச் சுற்றியும் தமிழகத்திலும் தான் இருக்கும் என உணர்வுபூர்வமாகச் சொன்னார் என்கிறார்கள் நாம் பேசிய அமைச்சர்கள் தரப்பில்.
தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளார். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications