Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாய் விட்டே கேட்டுட்டாரே வைகோ.. "ரொம்ப டூ மச் அண்ணே".. அசராத திமுக.. மதிமுகவை சுற்றவிடும் "பம்பரம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுக - திமுக கூட்டணி இழுபறியாக உள்ள நிலையில், விரைவில் சுமூக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்றும் நமக்கு கிடைத்துள்ளது.

மதிமுகவை பொறுத்தவரை, திமுகவுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது.. கடந்த முறை தேர்தலின்போது பாஜகவுக்கு எதிரான வைகோவின் பிரச்சார கர்ஜனையானது, திமுக கூட்டணி வெற்றிக்கு அடித்தளமாக அமைந்ததை மறுக்க முடியாது..

Did Vaiko ask 5 seats from DMK Alliance and what are the Important decisions in MDMK Seat allocations

1+1: கடந்த தேர்தலில் மதிமுகவுக்கு 1+1 என்ற ரீதியில், சீட்டுகளை ஒதுக்கி, தமிழகம் முழுவதும் வைகோவை பிரச்சாரத்துக்கு அனுப்பி, அதன் வெற்றியையும் அறுவடை செய்திருந்தது திமுக கூட்டணி.

இந்த முறை, கூட்டணியில் இவ்வளவு இழுபறி நடக்கும் என்றோ, அதைவிட முக்கியமாக, சின்னம் விவகாரம் விஸ்வரூபமெடுக்கும் என்றோ வைகோ எதிர்பார்க்கவேயில்லையாம்.

திடீர் மாற்றம்: கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, துரை வைகோ தந்திருந்த ஒரு பேட்டியில், "இந்த முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன், அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யப்போகிறேன்" என்று தடாலடியாக அறிவித்திருந்தார். இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என மதிமுகவில் அப்போது மிகப்பெரிய விவாதமே நடந்தது.

இது குறித்து நாம், மதிமுக தரப்பில் சிலரிடம் பிரத்யேகமாக விசாரித்தபோது, "துரை வைகோவுக்கு திமுக சீட் ஒதுக்கினாலும் அவர் திமுக சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக தலைமை கறாராக சொல்லிவிட்டது. இது குறித்து கட்சியில் விவாதம் வந்தபோது, திமுக சின்னத்தில் துரைவைகோ போட்டியிடுவது கட்சியின் தனித்தன்மையை பாதிக்கும்.

நிர்வாகிகள்: கட்சி நிர்வாகிகள் திமுக சின்னத்தில் போட்டியிட்டால் அது இஷ்யூவாகாது. அதுவே தலைவர் வைகோவின் மகன் போட்டியிட்டால் கட்சி பலகீனமாக தெரியும். அதனால், திமுக சின்னம் எனில் துரை போட்டியிடுவது சரியாக இருக்காது என வைகோவிடமும் துரையிடமும் நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள்.

அதேபோல, திமுக கடந்த முறை போல 1 சீட் தான் ஒதுக்கும். அதில் துரை போட்டியிட்டால், கிடைத்தது ஒரு சீட்டு, அதை கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கொடுக்காமல் மகனுக்கு கொடுத்து விட்டார் வைகோ என்று விமர்சிப்பார்கள். இதுவும் நம் தொண்டர்களிடம் பேசுபொருளாகும். அதனால், துரை போட்டியிடுவதை தவிர்க்கலாம்.

வைகோ முடிவு:
அடுத்த 2 வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. அதில் அவர் போட்டியிடட்டும் என்றும் மாநில நிர்வாகிகள் சொல்லியுள்ளனர். இது சரியானது தான் என வைகோவும் ஏற்றுக்கொண்டுவிட்டாராம். அதனால்தான், நான் போட்டியிடமாட்டேன் என துரை வைகோ சொல்லி வருகிறார்" என்று நம்மிடம் அன்று பகிர்ந்து கொண்டிருந்தார்கள் மதிமுகவினர்.

தற்போது கூட்டணி பேச்சுவார்த்தைகள் துவங்கியிருக்கும் நிலையில், மீண்டும் இதே இழுபறி நீடித்து வருவதாக தெரிகிறது. உதயசூரியன் சின்னத்தில் தங்களால் போட்டியிட முடியாது என்று மதிமுக உறுதியாக சொல்லி வருகிறதாம்.

உதயசூரியன்: ஆனால், திமுக தரப்பிலோ, 1+1 மட்டுமே தருவதற்கு தயாராக இருக்கிறதாம்.. இதுவே, மதிமுக - திமுக கூட்டணி இழுபறிக்கு காரணமாக இருந்து வருகிறது... அதுமட்டுமல்லாமல், இதுகுறித்த சில கூடுதல்களும் நமக்கு ஸ்பெஷலாக கிடைத்துள்ளன.

எப்படியாவது, 4 லோக்சபாவும் 1 ராஜ்யசபாவும் பெற்றாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது மதிமுக. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை ராஜா என்கிற பாணியில், "வேட்பாளர்களே இல்லாத கட்சிக்கு 4 லோக்சபாங்கிறது ரொம்ப டூ மச் அண்ணே. 1 சீட் மிக நியாயமானது. அதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என ஸ்டாலின் தரப்பிலிருந்து வைகோவுக்கு சொல்லப்பட்டுவிட்டதாம். இதைக்கேட்டு கடந்த 1 வாரமாக கொந்தளித்து வருகிறாராம் வைகோ.

பம்பரம் சின்னம்: இதைத்தவிர, இந்த முறை திமுக கூட்டணியில் நாங்கள் எங்களுடைய பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம். மதிமுகவின் எதிர்காலத்துக்கு இதுதான் சரியானது என பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவதில் பிடிவாதமாக இருக்கிறாராம் வைகோ.

சின்னம் விவகாரத்தை கேட்ட திமுக பேச்சுவார்த்தைக் குழுவினர், "அண்ணே, பம்பரம் சின்னமே மதிமுகவுக்கு இல்லை. இல்லாத ஒரு சின்னத்தில்தான் போட்டியிடுவோம்னு ஏன் அடம் பிடிக்கிறீங்க? முதலில் பம்பரம் சின்னம் மதிமுகவுக்கு கிடைக்கிற வழியைப் பாருங்க. எந்த சின்னத்தில் போட்டியிடுவதுங்கிறதை பிறகு பேசிக்கலாம்" என்று வைகோவிடம் சொல்லியிருக்கிறார்களாம். இதற்கு வைகோ என்ன முடிவெடுக்க போகிறார் என்று தெரியவில்லை.

சலசலப்பு:
அதேபோல, இன்னொரு சலசலப்பும் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.. துரை வைகோவை இந்த முறை களமிறங்க வேண்டும் என்று நிர்வாகிகளே வலியுறுத்தி வருகிறார்கள்..

அப்படியிருக்கும்போது, ஈரோடு தொகுதியிலும், காஞ்சிபுரம் தொகுதியிலும், விருதுநகர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர் தொகுதியிலும், முக்கிய சீனியர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்களாம்.. திமுகவில் 1 சீட்தான் என்று முடிவானால், அந்த சீட் யாருக்கு ஒதுக்கப்படும்?? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+