VJ Chithra.. சித்ராவின் கன்னத்தை கடித்து.. ஹேம்நாத்தின் தோழிகளா? புது குண்டு.. பெருகும் மர்மங்கள்
நடிகை சித்ராவின் மரணம் குறித்து அவரது அப்பா பரபர குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்
சென்னை: சின்னத்திரை சித்ராவின் மரணத்தின் மர்ம முடிச்சுகள் இதுவரை அவிழ்க்கப்படாமல் உள்ள நிலையில், அது தொடர்பான சந்தேகங்களும், கேள்விகளும் அதிகமாகி கொண்டே போகின்றன..
சித்ராவின் தற்கொலை தொடர்பாக அவரின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத்தும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஹைகோர்ட்
இந்த மனுவை விசாரித்த ஹைகோர்ட், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது... மேலும், ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று இடையீட்டு மனு தாக்கல் செய்த சித்ராவின் அப்பா காமராஜும் ஹேம்நாத் மனுவில் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

சித்ரவதை
அதன்படி, காமராஜும் நேற்றைய தினம் தன்னுடைய பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டது. அதனால், ஹேம்நாத்தை சந்தேகிக்கிறோம்.. சீரியலில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என சித்ரவதை செய்த ஹேம்நாத்தால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனது மகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னுடைய பெண் தோழிகளை வீட்டிற்கு ஹேம்நாத் அழைத்து வந்துள்ளார், 2 பேரும் ஒன்றாக இருக்கும்போதுதான் தன்னுடைய மகள் தற்கொலை செய்துள்ளார்.

ஆதாரங்கள்
விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காகவே தன்மீதான வழக்கை ரத்து செய்ய ஹேம்நாத் கோருகிறார்.. போதிய ஆதாரங்கள் உள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விசாரணையை எதிர்கொள்வதே சரியானது.. எனவே ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யாமல், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

யார் அந்த புள்ளி?
சித்ராவின் அப்பா தாக்கல் இந்த மனுவானது, பல்வேறு சந்தேங்களை மேலும் கிளப்பி விட்டுள்ளது.. காரணம், ஹேம்நாத்தை பொறுத்தவரை, அவர் இதுவரை போலீசில் தரப்பட்டு வந்த புகார்கள் முழுக்க முழுக்க வேறுவிதமாகவே உள்ளது. "சித்ராவின் மரணத்தில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கிறது.. சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மொத்தம் 4 பேர்.. தான் இப்போதுவரை உயிருடன் இருப்பதற்கான ஒரே காரணம் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்காகத்தான், என் உயிருக்கு அவர்களால் ஆபத்து உள்ளது என்று போலீசுக்கு போயிருந்தார் ஹேம்நாத்.

ஹேம்நாத்
அதாவது, சித்ராவின் மரணத்துக்கும் தனக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை என்பதே ஹேம்நாத் தரப்பட்டு வரும் முக்கிய தகவல்கள்.. ஹேம்நாத் சொன்ன அந்த நபர்கள் மீது கோர்ட்டில் இதுவரை வழக்கு போடப்பட்டதாக தெரியவில்லை... அந்த 4 பேர் யார் என்று போலீசில் ஹேம்நாத் சொன்னாரா தெரியவில்லை.. அவர்கள் யார்? யாரால் உயிருக்கு ஆபத்து என்று ஹேம்நாத்திடம் போலீசார் கேட்டார்களா? அதுவும் தெரியவில்லை.

அடிச்சு தொங்கவிட்டு..
மற்றொரு பக்கம், சித்ராவின் தரப்பிலும் சட்டரீதியான முயற்சிகள் அவ்வளவாக எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.. சித்ரா இறந்தது முதல் நேற்று பதில் மனு தாக்கல் செய்தது வரை, அனைத்து காரணங்களுக்கும் மூலகாரணம் ஹேம்நாத் மட்டுமே என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், ஏன் தீவிரத்தன்மையை காட்டவில்லை என்பதே குழப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.. சித்ராவின் கழுத்தையும், கன்னங்களையும் ஹேம்நாத் கடிப்பான், சித்ராவை அடித்து தொங்கவிட்டுவிட்டான் என்று சித்ராவின் நண்பர்கள் தொடர்ந்து புகார் சொல்லி வரும் நிலையில், அவர்களையும் போலீஸ் தரப்பில் விசாரித்தார்களா தெரியவில்லை.

மர்ம முடிச்சுகள்
ஆக, சித்ராவின் பெற்றோர் தரப்பு + ஹேம்நாத் தரப்பு + நண்பர்கள் தரப்பு.. இப்படி 3 பக்கமும் குழப்பங்கள்தான் அதிகமாகி உள்ள நிலையில், சித்ராவின் மரணத்தில் மர்ம முடிச்சுகள் மேலும் இறுகி கொண்டு வருவதாகவே கூறப்படுகிறது.. உண்மையிலேயே சித்ரா எப்படி இறந்தார்? யார் சொல்வது உண்மை? கோர்ட்டும், போலீசும் முழு விசாரணையை நடத்தி, நிஜத்தை விரைவில் வெளிக்கொணருவார்கள் என்று சித்ராவின் ரசிகர்களால் நம்பப்பட்டு வருகிறது..!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications