மலேசியாவில் இருந்து சென்னை திரும்பியதுமே விஜய்க்கு அடி மேல் அடி.. கடைசி படத்துடன் இப்படியா ஆகணும்
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. இப்படதின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது. இதற்காக மலேசியா சென்ற விஜய், அங்கு அரசியல் எதுவும் பேசவில்லை.. அதேநேரம் இதுதான் தனது கடைசி படம் என்று எமோசனலாக கூறினார். தொடர்ந்து மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய விஜய்க்கு அடுத்தடுத்து அடி மேல் அடியாக சம்பவங்கள் நடந்துள்ளது. இதுபற்றி பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவான நடிகர் விஜய்க்கு பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என கோடிக்கணக்கான ரசிர்கள் உள்ளார்கள். நடிகர் விஜய் அரசியலில் இறங்கி மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.

இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். கடந்த ஓராண்டாகவே அவ்வப்போது, மக்கள் சந்திப்பை நடத்தி வருகிறார். அண்மையில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணமும் செய்து மக்களிடம் உரையாற்றி வருகிறார். நடிகர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து அரசியலை தொடங்கி உள்ளார். திமுக ஒரு தீயசக்தி என்று ஜெயலலிதா பாணி அரசியலை முன்னெடுத்துள்ளார்.
அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்ட விஜய், சினிமாவில் தனது கடைசி படமாக 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இயக்குநர் எச்.வினோத் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந் தேதி இந்த படம் திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகிறது. 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வெகு விமரிசையாக நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், கோலாலம்பூரில் இருந்து தனி விமான மூலம் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் விஜய்யை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்களும், த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அதிக அளவில் குவிந்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜய்யை பார்ப்பதாக ரசிகர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. இதனால் காருக்குள் ஏறச்சென்ற விஜய், நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு விஜய் காரில் புறப்பட்டு சென்றார்.
கூட்ட நெரிசலில் ஒருவரை ஒருவர் முட்டிமோத, தனது கார் அருகே விஜய் வரும்போது கூட்டம் இன்னும் நெருங்கி வர ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில், விஜய்யும் கூட்டத்தின் நடுவே கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அதிலிருந்து மீண்டு நடிகர் விஜய் அங்கிருந்து புறப்பட்டபோது அவரின் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. பின்னோக்கி ரிவர்ஸில் வந்த கார் ஒன்று, விஜய் இருந்த காரின் முன்பக்கத்தில் மோதியிருக்கிறது. இதில், விஜய் இருந்த காரின் இண்டிகேட்டர் பகுதி சேதமடைந்துவிட்டது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
விஜய்யை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்த ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு தான் கரூரில் நடந்த சம்பவத்திற்கு காரணம் ஆகும். அதேபோன்ற ஒரு நெரிசலில் இன்று விஜய்யே சிக்கி தடுமாறு விழுந்திருக்கிறார். மலேசியாவில் இருந்து வந்தவருக்கு அடிமேல் அடியாக அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் பேசுபொருளாகி உள்ளது. விஜய் தனது ரசிகர்களுக்காகவே மீதமுள்ள வாழ்க்கை என்று மிகவும் எமோஷனலாக மலேசியாவில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்!












Click it and Unblock the Notifications