கவனிச்சீங்களா? வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல.. பேசிவிட்ட செல்லூர் ராஜு.. எடப்பாடியையா சொல்றாரு?
சென்னை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யும் வகையில் பேசியதாக ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடந்தது. அதிமுகவின் தோல்விக்கான காரணங்களை ஆலோசனை செய்து இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.

இந்த கூட்டத்தில் அதிமுகவின் தோல்விக்கான காரணங்களை அடுக்கி எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை வைத்தார். சிதம்பரம் மற்றும் மதுரை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் 4வது நாளாக தேர்தல் முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை செய்தார்.
அதில், அதிமுகவிற்கு பலர் சரியாக வேலை செய்யவில்லை. தேர்தல் களத்தில் பணிகளை செய்யவில்லை. மதுரைக்கு மட்டும் 8000 கோடிக்கு மேல் செய்து இருக்கிறோம். ஆனால் மதுரையில் நமக்கு ஏன் வாக்கு வரவில்லை. ஏன் தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். மதுரை மாஜி அமைச்சர் செல்லூர் ராஜுவை நோக்கி அவர் இதை கேட்டுள்ளார்.
செல்லூர் ராஜு பதிலடி: மீட்டிங்கில் எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்துள்ளார். அதில், நாங்கள் என்ன காமராஜ், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவா? நிர்வாகிகள் அனைவரும் பம்பரமாக தான் பணியாற்றினோம் இதுக்கு மேல் எப்படி ஒரு கட்சியில் வேலை பார்ப்பது? மதுரை மாவட்டத்தில் மட்டும் வாக்கு குறையவில்லை. 800 கோடி திட்டம் கொடுத்தும் ஓட்டுவரலைனா நம்ம என்ன புரட்சிதலைவரா?? புரட்சிதலைவியா??, என்று செல்லூர் ராஜு காட்டமாக கேட்டுள்ளார். முக்கியமாக எடப்பாடியை நைசாக விமர்சனம் செய்யும் வகையில் செல்லூர் ராஜு பேசி உள்ளார்.
எடப்பாடி மீது அட்டாக்: இது எடப்பாடி மீது வைக்கப்பட்ட அட்டாக் என்று நெட்டிசன்கள், அதிமுகவினர் சிலர் கூறுகின்றனர். அதாவது எடப்பாடி பழனிச்சாமியைதான் ரகசியமாக இப்படி செல்லூர் ராஜு அட்டாக் செய்துள்ளார். அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா போல வசீகரமான தலைவர் கிடையாது என்று பேசி உள்ளார்.
வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செல்லூர் ராஜு பேசி உள்ளார். மதுரையில் மட்டுமா அதிமுகவுக்கு வாக்கு குறைந்தது? மற்ற இடங்களில் எல்லாம் இதைவிட கம்மி. என்று செல்லூர் ராஜு சொல்ல இதுதான் காரணம். எடப்பாடிக்கு பதில் சொல்லவே அவர் இதை பயன்படுத்தி உள்ளார்.
எடப்பாடி வசீகரமான தலைவர் இல்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் செல்லூர் ராஜு. இது எடப்பாடி மீதான மறைமுகமான அட்டாக் என்று ஒரு சாரார் சொல்கின்றனர்.
மாற்று சாரார்: ஆனால் இன்னும் சிலர் அவர் எடப்பாடி பழனிசாமியை அப்படி பேசவில்லை. அதிமுகவில் இருக்கும் எல்லோரையும்தான் அவர் அப்படி சொல்லி இருக்கிறார். அதாவது அதிமுகவில் உள்ள எல்லோரையும் அப்படி விமர்சனம் செய்துள்ளார்.
யாரும் ஜெயலலிதா, எம்ஜிஆர் கிடையாது. எல்லோரும் நடுத்தரமான தலைவர்கள்தான்.. யாருக்கும் மக்களை ஈர்க்கும் சக்தி அதிகம் இல்லை.. எடப்பாடி உட்பட என்று செல்லூர் ராஜு சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications