இந்த ஒரு போட்டோவை பாருங்க.. நிலவில் விக்ரம் இறங்கியதும்.. கண்ட்ரோல் ரூமில் எடுக்கப்பட்ட போட்டோ.. செம
சென்னை: விக்ரம் லேண்டர் நேற்று நிலவில் வெற்றிகரமாக இறங்கியதும் பெங்களூரில் இருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் இருந்து அது புகைப்படமாக எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று கவனம் ஈர்த்து உள்ளது.
நிலவின் தென் துருவம் என்பது மர்மங்கள் நிறைந்தது. இதுவரை நிலவின் தென் துருவங்களுக்கு உலகின் எந்த ஒரு கருவியும் சென்றதே இல்லை. தென் துருவம் என்றால்.. நாம் எப்போதும் நிலவின் வடக்கு பகுதியை மட்டுமே பார்த்து வருகிறோம்., நிலவின் தென் பகுதி எப்படி இருக்கும் என்பதே நமக்கு தெரியாது.

நிலவின் தென் பகுதி என்பது நாம் பார்க்காத நிலவின் பின்பக்கம். இந்த பின்பக்கம் என்பது கிட்டத்தட்ட 2 பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாத பகுதி ஆகும். இங்கே சூரிய வெளிச்சம் இன்றி வெறும் இருளான, குளிரான பகுதிகள் மட்டுமே உள்ளன.
மிக மிக குறைவான அளவில் அதிகாலை சூரியன் போன்ற வெளிச்சம் மட்டுமே இருக்கும். இங்குதான் தற்போது விக்ரம் லேண்டர் களமிறங்கி உள்ளது. விக்ரம் லேண்டர் களமிறங்கி கிட்டத்தட்ட 4 மணி நேரம் கழித்து அதில் பிரக்யான் ரோவரும் களமிறங்கி உள்ளது.
இந்த புகைப்படங்களை உடனுக்குடன் சந்திரயான் 3 அனுப்பி வருகிறது. சந்திரயான்-2வில் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை இருந்தது. அதேசமயம் சந்திரயான்-3 ஆர்பிட்டர் இல்லை. இதில் ஒரு லேண்டர்(LM), ப்ராபல்ஷன் மாட்யூல் (PM) மற்றும் ஒரு ரோவர் ஆகியவை உள்ளது. இதனால் சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் மூலம் பூமிக்கு புகைப்படங்களை அனுப்பி வருகிறது சந்திரயான் 3ல் இருக்கும் விக்ரம் லேண்டர்.
இஸ்ரோ கண்ட்ரோல் ரூம்: இதற்கான செயல்பாடுகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கண்ட்ரோல் ரூமில் நடந்து வருகிறது. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிலையில் இஸ்ரோ கண்ட்ரோல் ரூமில் நேற்று காணப்பட்ட காட்சி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
அதன்படியே அறையில் அதிக அளவில் பெண் எஞ்சினியர்கள் அமர்ந்து இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. அதாவது பெண் எஞ்சினியர்கள் வரிசையாக அமர்ந்து இருப்பது கவனத்தை ஈர்த்து உள்ளது. நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு உங்கள் அம்மாவின் எளிமையான தோற்றம் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தல் ஒரு தோற்றம் உங்கள் கண் முன் வருமே.. அப்படி ஒரு சாதாரண எளிமையான புடவையில், பெரிய ஆர்ப்பாட்டம் இன்றி பெண் எஞ்சினியர்கள் அமர்ந்து இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

படங்களில் காட்டுவது இல்லாமல் மிக மிக எளிமையாக இவர்கள் இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இது போன்ற பெரிய மேடையில் பெண்கள் பலர் பங்கேற்று இருப்பது இந்தியாவின் பாலின சமத்துவத்துவதையும், பெண்களின் முன்னேற்றத்தையும் உலக நாடுகளுக்கு முன்னிறுத்துவதாக உள்ளது.
பாதிக்கு பாதி பெண்கள் அங்கே அமர்ந்து இருந்த காட்சி பெண்களின் அறிவியல் ரீதியான முன்னேற்றத்தை உணர்த்தும் விதமாக அமைந்து உள்ளது. முக்கியமாக உலக நாடுகள் பலவற்றிற்கும் இந்தியா குறித்த புதிய இமேஜை கொடுக்கும் காட்சியாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications