கல்வி தந்தை.. பெரம்பலூர் களம்.. அரசியல் குறியீடு? பகாசூரன் கேரக்டரை யாரோடும் ஒப்பிடாதீங்க.. மோகன்ஜி
காசூரன் கதாபாத்திரங்களை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என்று இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: இயக்குனர் செல்வராகவன், நட்டி நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் கதாபாத்திரங்களை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என்று இயக்குனர் மோகன் ஜி கூறியுள்ளார்.
இயக்குனர் செல்வராகவன், நட்டி, ராதாரவி, தாரக்ஸி, கே.ராஜன்,கூல் சுரேஷ்,சசிலயா உள்பட பலர் நடித்து இன்று வெளியாகி உள்ள படம் பகாசூரன். சாம்.சி.எஸ். இசையமத்துள்ள இந்த படத்தை மோகன் ஜி இயக்கி உள்ளார். செல்ஃபோனும், அதில் உள்ள டேட்டிங் செயலிகளும் இளம் தலைமுறையினரை, குறிப்பாக பெண்களை எப்படியெல்லாம் சீரழிக்கின்றன என்பது தான் பகாசூரன் கதையாகும்.
இந்த படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் கொலைகள், நட்டியின் இன்டலிஜன்ஸை காட்ட வைக்கப்பட்ட காட்சிகள், 'மேங்கோ கால் டாக்ஸி', கல்வித் தந்தை பட்டம் கொண்ட அரசியல்வாதி, பெரம்பலூர் கதைக்களம் என அரசியல் குறியீடுகள் பகாசூரன் படத்தில் இருக்கிறது என படத்தை பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர்.

எனக்கு திருப்தி
இந்நிலையில் பகாசூரன் படத்தின் இயக்குனர் மோகன் ஜி, பிரபல தமிழ் ஊடகத்திற்கு இன்று பேட்டி அளித்த போது, இந்த படத்தின் கதாபாத்திரங்களை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். பேட்டியில் மோகன் ஜி கூறுகையில், படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மிகவும் சந்தோஷமாக உள்ளது. இது எதிர்பார்த்த ஒன்று தான். எனக்கு எல்லாமே அமைந்துவிட்டது. சரியான விஷயத்தை செய்திருப்பதாக எனக்கு திருப்தி இருக்கிறது. எதற்காக சினிமா துறைக்கு வந்தேனோ.. அதை செய்து கொண்டிருக்கிறேன் என்ற ஆத்ம திருப்தி இருக்கிறது.

செல்வா சார்
எங்கல்லாம் மக்கள் அமைதியாக இருப்பாங்களோ, உறைஞ்சு போய் பார்ப்பாங்களோ அப்படி பார்த்தாங்க.. அதேபோல் எங்கெல்லாம் ஆரவாரம் செய்வார்களோ அதெல்லாம் செஞ்சு, என்ஜாய் பண்ணி படத்தை பார்த்தார்கள்.. செல்வா சார் வரும் போது ரொம்பவே ஆரவாரம் செஞ்சாங்க.. நட்டி சாருக்கு சதுரங்க வேட்டைக்கு அப்புறம் இந்த படத்துல இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு.. எனக்கு பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

இயக்குனராக யோசிச்சேன்
ஒரு சில காலேஜில் மாணவிகளை வாத்தியார் பாலியல் பலாத்காரம் பண்றது.. உயிரை மாய்ச்சுகிட்டாங்க.. மாடியில இருந்து குதிச்சுட்டாங்க.. இதெல்லாம் பார்த்துகிட்டேன் தான் இருக்கிறோம். இதெல்லாம் கடந்து போயிடுறோம்.. இதுக்கெல்லாம் என்ன தீர்வுன்னு சொல்ல முடியல.. ஆனால் ஒரு பிலிம் மேக்கரா ஒரு தீர்வா சொல்ல முடியுது. இதுல எல்லாம் கண்காணிப்பாக இருந்தா நடக்காது அப்படின்னு சொல்லனும்னு நினைச்சேன்.. சொல்லியிருக்கேன்.

கதாபாத்திரங்கள்
நான் மக்கள கேட்டுக்கிறது.. இந்த படத்துல வர்ற கதாபாத்திரங்களை யாருகூடயும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். இது திரௌபதியில நடந்துதான் என் மேல தப்பான முத்திரைகள் வந்தது. இந்த படத்துல அப்படி எதையும் தப்பா தொடர்பு படுத்தி பார்க்காம, ஒரு சினிமாவா பார்த்து கொண்டாடனும்னு நான் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த படம் பற்றி இன்னமும் யோசிக்கவில்லை. இந்த படத்திற்கு மக்களிடம் இருந்து ரிலட்டை பார்த்துவிட்டு முடிவு செய்வேன். அடுத்ததாக ரிச்சர்ட் சாருடன் சேர்ந்து பண்ணலாம் என்று இருக்கிறேன். கூடிய சிக்கிரம் இதுபற்றி முடிவு செய்வோம்" இவ்வாறு இயக்குனர் மோகன் ஜி கூறியுள்ளார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications