பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதற்கு முன் சிந்தித்தீர்களா 'ஜோசப் விஜய்'.. பாஜக வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதற்கு முன், தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய பின்னடைவுகள் குறித்து சிந்தித்தீர்களா, முதல்வர் ஜோசப் விஜய்? என்று தமிழக பாஜக சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொருளாதார ரீதியாக 10 முதல் 20 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் அபாயம் உள்ளது என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் நேற்று சட்டசபையில் அறிவித்தார். தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படுகிறது. தற்போது, இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டது. வளர்ந்துவரும் சென்னை மாநகரத்தின் தேவை, பயணிகளின் வசதி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டும், சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும், புதிய விமான நிலையம் அமைக்க வேண்டிய தேவை உள்ளது.

Parandur airport project

இதற்காக தேர்வு செய்யப்படும் இடம், பெரிய அளவில் விவசாயிகளை பாதிக்காத வகையிலும், அதிக அளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைய வேண்டும். ஆனால், முந்தைய அரசுகள், விவசாயிகளை பெரிய அளவில் பாதிக்கும் வகையிலும், குடியிருப்புகளை அதிக அளவில் அகற்றும் வகையிலும், விமான நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களை அறிந்து, நாள் 20.1.2025 அன்று அப்பகுதிக்குச் சென்று, அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து சில அறிவிப்புகளை வெளியிட்டேன்.

அதன்படி, "சென்னை பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களை உள்ளடக்கி அமையவிருக்கும் விமான நிலையத்தை எதிர்த்துப் போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களுக்கும் மேலாக இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.

விக்ரவாண்டியில் 2024-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்திலேயே, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கான விமான நிலையங்களின் பங்கு பற்றி நான் நன்கு அறிவேன். அதற்கான என்னுடைய முழு ஆதரவும் உண்டு. ஆனால் பரந்தூரில் இந்தத் திட்டம் அமையக்கூடாது. இந்தத் திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தேன்.

மக்கள் மத்தியில் நான் அன்றே அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு, புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும், துறை வல்லுநர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கனவே, நான் உறுதி அளித்தவாறு, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த அரசால் கைவிடப்படும்.

அத்துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர்களிடம் கலந்தாலோசித்து, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவ்விடங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு, புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.

இதற்கிடையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய 5-ம் முனையம் (டெர்மினல் 5) என்ற புதிய பயணிகள் முனையம் அமைக்க, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் இணைந்து, அணுகுசாலை மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் 3-ம் பயணிகள் முனையம் (டெர்மினல் 3) என்ற பயணிகள் முனைய கட்டுமானப் பணிகள் முடிவுற்ற பின்பு, ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளைக் கையாளக் கூடியதாக இருக்கும். மேலும், புதிய டெர்மினல்-5 பயணிகள் முனையம் செயலாக்கத்துக்குப் பிறகு, ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடியதாக இவ்விமானநிலையம் இருக்கும். இதன்மூலம், சென்னை விமான நிலையத்தின் சேவைகள் மேம்படுத்தப்படுவதோடு, பயணிகளின் போக்குவரத்துத் தேவை புதிய விமான நிலையம் அமைக்கப்படும்வரை பூர்த்தி செய்யப்படும்" இவ்வாறு முதல்வர் விஜய் கூறினார்.

முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திமுக, அதிமுக மட்டுமின்றி, பாஜகவுமே கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது. தமிழக பாஜக வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், "பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்ட முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழக மக்கள் சார்பாக சில கேள்விகளை கேட்கிறோம். நிலம் கையகப்படுத்தி 90 சதவீதம் மக்களுக்கு இழப்பீடு வழங்கிய பின்னர் திட்டத்தை கைவிடுவது ஏன்? இழப்பீடு பெற்று தங்களது நிலத்தை வழங்கிய மக்களுக்கு உங்கள் பதில் என்ன?

கையகப்படுத்திய நிலங்களை இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்... அங்கு வேறு திட்டம் கொண்டுவரப்பட்டால், தற்போது கொண்டுவரப்படும் சூழலியல் மற்றும் விவசாயிகள் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா? மாற்று இடமே தேர்வு செய்யாமல், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்காமல், அந்த அவசர முடிவு ஏன்? இந்த முடிவால் தமிழ்நாடு பொருளாதார ரீதியாக 10-20 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் அபாயம் உள்ளது. இதற்கு உங்கள் தீர்வு என்ன? எங்களின் இந்த கேள்விகளுக்கு தவெக அரசு தெளிவான பதில் அளிக்க வேண்டும்" இவ்வாறு தமிழக பாஜக சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+