பத்திக்கிருச்சே.. இதுக்குன்னே தனி வீடு.. ராகினியிடம் கெஞ்சிய குடும்பம்.. பரிதாப கணவன்.. அலறிய ஆவடி

இளைஞரை வழிமறித்து கொன்ற கும்பலை ஆவடி போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளைஞரை வழிமறித்து கொலை செய்த கும்பலை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. கத்தியால் பல இடங்களில் குத்தப்பட்டும், கழுத்தை அறுத்தும், இளைஞரை கொலை செய்தது, சென்னை ஆவடி பகுதியில் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

சென்னை புழல் லட்சுமிபுரம் அசோகர் தெருவை சேர்ந்தவர் சுதாசந்தர்.. 22 வயதாகிறது.. கண்ணாடிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்... நேற்றிரவு சுதா சந்தர் பைக்கில், ஒரு இளம்பெண்ணுடன் ரெட்டைஏரி கல்பாளையம் அருகே வந்துள்ளார்.

அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், சுதாசந்தரை வழிமறித்து அரிவாளால் சரமாரி வெட்டிக் கொன்றுவிட்டு, தப்பி விட்டது. இதைப் பார்த்து அங்கிருந்த மக்கள் தெறித்து ஓடினார்கள்.. உடனே இதுகுறித்த புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 தகாத உறவு

தகாத உறவு

போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த சுதாசந்தர் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... மேலும் விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போது, இந்த கொலை தொடர்பாக, சுதாசந்தருடன் வந்த ராகினி என்ற பெண்ணை பிடித்து விசாரணையை நடத்தினர்... முதற்கட்ட விசாரணையிலேயே, தகாத உறவால், இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் சொல்லும்போது, "சுதாசந்தர் ஆவடியில் வசித்து வந்தபோது ராகினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது தகாத உறவாக மாறியுள்ளது என்பது தெரியவந்தது.

 ரெட்டை ஏரி

ரெட்டை ஏரி

ராகினிக்கு 25 வயதாகிறது.. ராகினிக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது.. கணவர் பெயர் வசந்த்.. இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது.. இவர்களின் கள்ள உறவு, ராகினியின் கணவருக்கும், அவரது அண்ணன்களான உதயா, பரத் என்ற ராபினுக்கும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் 3 பேரும், ராகினியையும், சுதாசந்தரையும் கண்டித்துள்ளனர். ஆனாலும் கள்ள உறவு நீடித்து வந்துள்ளது.. இதன் காரணமாக கடந்த 3 மாத காலமாகவே கணவருடன் சண்டை போட்டுக் கொண்ட, அண்ணன் வீட்டில் ராகினி வசித்து வந்துள்ளார்... ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறி, சுதாசந்தருடனேயே போய்விட்டார்.. ரெட்டை ஏரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ராகினி ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

 ஆட்டோ டிரைவர்

ஆட்டோ டிரைவர்

இதுதான், வசந்த்துக்கும், சகோதரர்களுக்கும் சுதாசந்தர் மீதான ஆத்திரத்தை உண்டுபண்ணி உள்ளது.. கொலை செய்ய வேண்டும் என்று அப்போதுதான் முடிவெடுத்தனர்.. நேற்றிரவு ராகினியுடன் வந்த சுதாசந்தரை, அந்த கும்பல் கள்ளிப்பாளையம் அருகே கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதும் உறுதியானது.. இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.. மேலும், கொலையாளிகள் வந்த ஆட்டோ நம்பரை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது.. இறுதியில், அந்த ஆட்டோ டிரைவர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது..

 ஸ்கூல் லவ்

ஸ்கூல் லவ்

அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.. ஆனால், ராகினியின் கணவர் வசந்த், அண்ணன்கள் உதயா, பரத் ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.. அவர்களை தேடிவருகிறோம்" என்றனர்.. ஆவடியில் வசித்து வந்த சுதாசந்தர், லட்சுமி புரத்திற்கு வந்து 2 மாதம் தான் ஆகிறதாம்.. அதற்குள் அந்த பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டது என்பது அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்திருக்கிறது.. அதற்கு பிறகுதான், இதுகுறித்து அவர்களுக்கு விஷயமே தெரிந்துள்ளது.. சுதா சந்தரும், ராகினியும் ஸ்கூல் படிக்கும்போதே காதலித்து வந்திருக்கிறார்கள்..

 கொந்தளிப்பு

கொந்தளிப்பு

இவர்களது காதல் விவகாரம் ராகினி வீட்டுக்கு தெரிந்து, கொந்தளித்துள்ளனர்.. அதனால்தான், அவசர அவசரமாக வசந்த் என்ற உறவினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும், காதலனை மறக்க முடியாமல் தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார் ராகினி.. இந்த விஷயம் தெரிந்து மொத்த குடும்பமும் கொந்தளிக்கவும்தான், தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையையும் விட்டுவிட்டு, சுதா சந்தருடன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தும் அளவுக்கு துணிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.. தலைமறைவானவர்கள் கைதானவர்கள் மேலும் இதுகுறித்த தகவல்கள் வெளிவரக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+