Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விலாங்கு மீன்".. சைஸா நழுவுதா பாஜக.. நைஸா எகிறுதா அதிமுக.. இதென்ன புதுசா கிளம்புதே.. தகிக்கும் யூகம்

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜக தரப்பில் சீனியர்கள் யாரும் இன்னும் செல்லவில்லையாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில் ஜரூர் வேலையை அதிமுக தொடங்கி உள்ளது.. ஆனால், அதேசமயம், பாஜக தரப்பு என்ன செய்கிறது? ஈரோடு தொகுதியில் பாஜகவின் ரோல் என்ன என்பது குறித்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளன.. அதுகுறித்து சில தகவல்களும் வட்டமடிக்கின்றன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, திமுக கூட்டணி முதல்நபராக ஆலோசனையை நடத்தி, வேட்பாளரையும் அறிவித்துவிட்டது.. பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது.

ஓபிஎஸ், எடப்பாடி, பாஜக என 3 தரப்புமே பல்வேறு குழப்பங்களுக்கு ஆளானது.. 3 தரப்புமே பல்வேறு காய்நகர்த்தல்களை செய்தன.. 3 தரப்மே 10 நாட்களுக்கும் மேலாக கூடி, கூடி, தனித்தனியாக ஆலோசித்தன.. இதில், அதிமுகவின் 2 அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு பாஜக ஆதரவுக்காக கமலாலய வாசலில் காத்துக்கிடந்தன.

 கமலாலயம்

கமலாலயம்

ஒரு கட்டத்தில் பாஜகவை அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி கழற்றிவிட்டது.. தேர்தல் பணிக்குழு பேனரில் கூட்டணியை மாற்றி, பாஜகவுக்கே டென்ஷனை தந்துவிட்டது.. ஆனால், அன்றும் - இன்றும் என்றும் பாஜகவுக்கான ஆதரவை இம்மியளவும் மாற்றிக் கொள்ளாத ஓபிஎஸ், இடைத்தேர்தல் விஷயத்திலும், பாஜகவையோ எதிர்நோக்கி காத்து கிடந்தது.. ஆனால், பாஜகவோ, அதிமுகவின் 2 அணிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று வலியுறுத்தியது.. பின்னர் சுப்ரீம்கோர்ட் தலையீட்டுக்குப் பிறகு, வேட்பாளரை அதிமுக ஓபிஎஸ் அணி வாபஸ் பெற்றது...

 ஹேப்பி தென்னரசு

ஹேப்பி தென்னரசு

எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை உறுதியானது.. பாஜகவும் கடைசிநாளில் தன்னுடைய ஆதரவை தந்தது.. வேறு வழியில்லாமல் ஓபிஎஸ்ஸும் வேட்பாளரை வாபஸ் பெற்றார்.. இறுதியில், எடப்பாடி தரப்பு மட்டும் வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்துகிறது... புது சின்னத்தில் போட்டியிட வேண்டி வருமோ என்ற கலக்கம் எடப்பாடி டீமை சூழ்ந்துவந்த நிலையில், இலை கிடைத்த தெம்புடன் காணப்படுகிறது அதிமுக.. அதிலும் தென்னரசு படுகுஷியில் உள்ளார்..

பாரிவேந்தர்

பாரிவேந்தர்

தமாகா உட்பட புதிய தமிழகம், ஏசி சண்முகம், பாரிவேந்தர், என பலரும் திரண்டு எடப்பாடிக்கு ஆதரவை தந்துள்ளனர்.. இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சீனியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதேசமயம், கூட்டணி தலைவர்களும் அதிமுக வெற்றிக்காக பிரச்சாரம் செய்யப்போவதாக உறுதி தந்துள்ளனர். ஆனால் பாஜக மட்டும் இதுவரை தேர்தல் பிரச்சாரம் பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை என்கிறார்கள்.. பாஜக மாநில முக்கிய நிர்வாகிகளோ, மூத்த தலைவர்களோ யாரும் பிரச்சாரத்துக்கு இதுவரை செல்லாமல் உள்ளார்களாம்..

 ஹேப்பி எடப்பாடி

ஹேப்பி எடப்பாடி

அதேபோல, இரட்டை இலை சின்னத்தை முடக்க நான் காரணமாக இருக்கமாட்டேன், இலை முடங்கக்கூடாது என்பதற்காக விட்டுக்கொடுக்கிறேன் என்று சொன்ன, ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை வாபஸ் பெற வைத்துவிட்டார் என்றாலும், பிரச்சாரத்துக்கு அவருக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அழைப்பு விடுக்கவில்லை.. எடப்பாடி டீம் அழைப்பு விடக்காதவரை, ஓபிஎஸ் டீமும் பிரச்சாரத்துக்கு வரப்போவதில்லை என்கிறார்கள்.. ஆனால், அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து விரைவில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார் என்றாலும், பாஜக நிர்வாகிகள் யாரும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கவில்லையாம்.

பாய்காட்டா

பாய்காட்டா

நேற்றுமுன்தினம் ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சி கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ சரஸ்வதி மட்டும், வந்து கலந்து கொண்டதுடன், எடப்பாடியை பேசிவிட்டு கிளம்பிவிட்டாராம்.. அதைவிட முக்கியமாக, வேட்பாளர் தென்னரசுவின் பிரச்சாரத்தில் கூட பாஜக கொடிகளையே காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பை கிளப்பி வருகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜக ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளதோ என்று ஐயம் வந்துள்ளதாம்.. அதுமட்டுமல்ல, இன்னொரு உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று பரவி வருகிறது.. பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆன்லைன் கூட்டத்தில் அதிமுக குறித்து பேசப்பட்டதாம்..

 முதல் மரியாதை

முதல் மரியாதை

குறிப்பாக, "நாம் சொன்னபடி கேட்காமல், எந்த அணியையும் சேர்த்து கொள்ளாமல், தான் நினைப்பதை மட்டுமே இப்போது எடப்பாடி தரப்பு செய்து கொண்டிருக்கிறது. அதனால், அதிமுகவுக்கு பாடம் புகட்டினால்தான், சட்டப்பேரவை தேர்தலில் நமக்கு உரிய மரியாதை கிடைக்கும்... நாம் கேட்கும் சீட்டுகளும் கிடைக்கும்... எனவே, அதிமுகவுக்கு பாடம் புகட்ட காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்" என்று பேசப்பட்டதாம்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, அதிமுக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துவிட்டார்களாம்.. இப்போதைக்கு தேர்தல் பிசியாக உள்ளதால், இடைத்தேர்தல் முடிந்தவுடன் இந்த விவகாரத்தை பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+