மதுரை கும்பாபிஷேகத்தில் குமுறிய ஓதுவார்கள்! கண்டும் காணாத விஜய்? அமைச்சரை பாராட்டிய கொடுமை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்ததாக அமைச்சர் ரமேஷை பாராட்டிய முதல்வர் விஜய்க்கு அன்றைய தினம் நடந்த குளறுபடிகள் குறித்து உண்மையிலேயே தெரியாதா இல்லை தெரிந்தும் தெரியாதது போல் பாராட்டுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 17ஆம் தேதி நடந்தது. கோயில் நகரம் மதுரை என்பதால் அங்கு ஒரு திருவிழா என்றால் அது களைகட்டும். இதனால் மதுரையை சுற்றியுள்ள மாவட்டத்தினர், வட மாவட்டத்தினர், வெளி மாநிலத்தவர் உள்ளிட்டோர் மீனாட்சியை காண 17ஆம் தேதி நள்ளிரவு முதலே கோயில் அருகே குவிந்தனர்.

Madurai Meenakshi temple kumbabhishekam

கும்பாபிஷேகம் தொடங்குவதற்கு முன்பிருந்தே மக்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்துவிட்டார். அதாவது சித்திரை வீதியில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

மேலும் 4 மாசி வீதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் அந்த பகுதியில் முன்னோக்கி செல்ல முடியாமல் நீண்ட நேரமாக நெரிசலில் தவித்தனர்.

விஐபி பாஸ்

முக்கிய கோயில் திருவிழாக்களில் விஐபி பாஸ்கள் வழங்கப்படும். அது போல் பொதுமக்களுக்கும் பாஸ்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 11 ஆயிரம் பாஸ்களில் வெறும் 2000 பாஸ்களை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாம். கடந்த காலங்களில் 5000 பாஸ்களை வரை வழங்கப்பட்டதாம்.

மீதமுள்ள 9 ஆயிரம் பாஸ்கள் யாருக்கு, எந்தெந்த அடிப்படையில் (criteria) கொடுக்கப்பட்டது என்பதற்கான வெளிப்படைத்தன்மை இல்லை என பக்தர்கள் குற்றம்சாட்டினர். அதிலும் சிகப்பு நிறம், மஞ்சள் நிறம் என நிறங்களின் அடிப்படையில் வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழ் ஓதுவார்கள்

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது நடந்த சடங்குகளின் போது தமிழ் ஓதுவார்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் கோபுர கலசங்களின் மீது புனித நீர் ஊற்றும் நிகழ்வின் போது தமிழ் திருமுறைகளை ஓதுவதற்கு உரிய அனுமதி கொடுக்கப்படவில்லை என்றும் பெண் ஓதுவார்கள் குற்றம்சாட்டினர்.

சமஸ்கிருதத்திற்கு இன்! தமிழுக்கு அவுட்!

தமிழை புறந்தள்ளிவிட்டு சமஸ்கிருதத்தில் பூஜை செய்வோருக்கு மட்டுமே முன்னுரிமை அளித்ததாகவும் புகார் எழுந்தது. ஓதுவார் சேலம் சத்தியபாமா தலைமையில் கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளே சித்திரை வீதியில் தர்ணா போராட்டம் நடத்தினர். கருவறை, யாகசாலை சடங்குகளில் தமிழ் ஓதுவார்கள் பங்கேற்க இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போது சில அர்ச்சகர்கள் ஆகம விதியை சுட்டிக் காட்டி அனுமதி வழங்க மறுத்துவிட்டதாகவும் ஓதுவார்கள் குற்றம்சாட்டினர்.

கும்பாபிஷேகம் முடிந்தும் வேதனை

இது ஒரு புறம் இருக்க கும்பாபிஷேகம் முடிந்ததும் ஹெலிகாப்டர், டிரோன் மூலம் புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் தங்கள் மீது புனித நீர் தெளிக்கவில்லை என பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர். காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த சிவாச்சாரியார்களும், "புனித நீர் தெளிக்காமல் என்ன கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள், இதற்கு நாங்கள் டிவியிலேயே பார்த்திருப்போமே" என கடிந்து கொண்டனர்.

புனித நீர் தெளிக்காவிட்டால் அந்த இடத்தை விட்டு யாரும் நகர மாட்டோம் என பொதுமக்கள் எச்சரித்ததால் போலீஸார் ஏதோ பாட்டிலில் இருந்து கொண்டு வந்து புனித நீரை தெளித்தனராம். ஆனால் அது புனித நீரில்லை, குடிநீரை தெளித்துள்ளனர் என மக்கள் கொந்தளித்தனர்.

சுவாமி தரிசனத்திலும் குளறுபடி

சரி வரிசையில் நின்றவர்களுக்காவது அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதா என்றால் அதுவும் இல்லை என்றார்கள். கும்பாபிஷேகம் முடிந்து 10 மணிக்கு மேல் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் மணிக்கணக்கில் மக்கள் காத்திருந்தும் சுவாமி தரிசனம் செய்ய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

விஐபிக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாம். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், விஐபிக்களுக்கு மட்டும் முன்னுரிமை என்றால் பொதுமக்களை ஏன் கும்பாபிஷேகத்திற்கு அழைத்தார்கள் என கேள்வி எழுப்பினர்.

கேட்டை உடைக்க எச்சரித்த பெண்கள்

கேட்டை திறக்காவிட்டால் உடைத்துவிடுவோம் என பெண்கள் கோபமாக பேசினர். "இதுவரை எத்தனையோ கும்பாபிஷேகங்களை பார்த்திருக்கிறோம், ஆனால் இது போல் மோசமான ஒரு கும்பாபிஷேகத்தை இதுவரை பார்த்ததில்லை" என மதுரை மக்கள் மனம் நொந்தனர்.

இத்தனை குளறுபடிகள் நடந்து தவெக அரசை பலரும் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் "மதுரை கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது" என இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷை முதல்வர் விஜய் அழைத்து பாராட்டியுள்ளாராம். இது மதுரை மக்களின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருக்கிறது.

கும்பாபிஷேகத்திற்கு முன் நாள் இரவு முதல் அடுத்த நாள் முழுவதும் மக்கள் அல்லோகலப்பட்டிருந்த நிலையில் விஜய்க்கு எப்படி தெரியாமல் போயிருக்கும்.

தவறான அறிக்கை

மக்கள் சந்தித்த சிரமங்களை மறைத்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், விஜய்க்கு பொய்யான அறிக்கை அளித்தனரா? இல்லாவிட்டால் அரசியல் ரீதியான பிம்பத்தை பாதுகாக்க ரமேஷுக்கு விஜய் பாராட்டுகளை தெரிவித்தாரா?

மக்கள், ஓதுவார்களின் போராட்டம், புனித நீர் தெளிக்கப்படாதது உள்ளிட்டவை முதல்வரின் கவனத்திற்கு செல்லாமல் மறைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹைகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க சட்டசபையில் முதல்வர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்திருந்த நிலையில் மதுரை கோயிலில் தமிழ் ஓதுவார்களும் தமிழில் மந்திரங்களும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏற்க முடியாத ஒன்று!

அதிகாரிகள் சொல்லாவிட்டாலும் உதயநிதியை பேப்பர் படிக்க சொன்ன விஜய், 18 ஆம் தேதி பேப்பரை படித்திருந்தாலோ அல்லது 17ஆம் தேதியே டிவி சேனல்களையும் சோசியல் மீடியாக்களையும் பார்த்திருந்தாலோ இப்படி பாராட்டியிருக்கமாட்டாரோ? எல்லாம் மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்குமே வெளிச்சம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+