சென்னையில் 1 மாதத்துக்குப் பின் டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ94.20 ஆக விற்பனை
சென்னை: சென்னையில் ஒரு மாதத்துக்குப் பின்னர் இன்று டீசல் விலை 1 லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ94.20 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் 1 லிட்டர் பெட்ரோல், டீசல் ரூ100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரிகள் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளன; அதேநேரத்தில் மாநிலங்களுடன் பகிரக் கூடிய வரிகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மாநிலங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையில் சொற்பமான தொகைதான் கிடைத்து வருகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மாநில அரசுகள், பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்கவும் தயக்கம் காட்டுகின்றன. இந்த நிலையில் தமிழக நிதிநிலை அறிக்கையில், பெட்ரோல்-டீசல் மீதான வரி ஒரு லிட்டருக்கு ரூ3 குறைக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
இதனையடுத்து தமிழகத்தில் பெட்ரோல் விலை கடந்த சில நாட்களாக ரூ100க்கும் கீழே குறைந்துள்ளது. சென்னையில் தற்போது பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ99.47க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் டீசல் விலை ஒரு மாதத்துக்குப் பின்னர் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்துள்ளன. சென்னையில் 1 லிட்டர் டீசல் நேற்று ரூ94.39-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 19 காசுகள் குறைந்து 1 லிட்டர் டீசல் விலை ரூ94.20க்கு விற்பனையாகிறது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications