Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க பார்சலில் போதை பொருள், வங்கி கணக்கில் பணம் என்று போன் வந்தால் நம்பாதீங்க! தப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் மொபைல் நம்பரை வைத்து மோசடி, நீங்கள் அனுப்பிய பார்சலில் போதைப் பொருள் என திடீர் திடீரென இப்போது அப்பாவி மக்களைக் குறிவைத்து மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதை டிஜிட்டல் அரஸ்ட் என்கிறார்கள். இதை எப்படிக் கண்டுபிடிப்பது. இதில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இணையத்தை வைத்து மோசடி செய்வது இப்போது பரவலாக அதிகரித்துள்ளது. அப்பாவி மக்களைக் குறிவைத்து இவர்கள் சைபர் மோசடிகளைச் செய்கிறார்கள். இதனால் மக்கள் பலரும் தங்கள் சேமிப்பை முழுமையாகக் கூட இழக்க நேரிடுகிறது.

technology cyber crime

சைபர் மோசடி: சைபர் மோசடி என்பது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ரூபத்தில் இருக்கும். இப்போது டிஜிட்டல் அரஸ்ட் எனப்படும் சைபர் மோசடி தான் பரவி வருகிறது. இதை வைத்து மோசடி பேர்வழிகள் பல கோடி ரூபாய் பணத்தைத் திருடுகிறார்கள். அதென்ன டிஜிட்டல் அரஸ்ட் மோசடி என்றால் என்ன.. இதை வைத்து எப்படி மோசடி செய்கிறார்கள்.. இதில் இருந்து நாம் எப்படித் தப்ப வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

என்ன நடக்கும்: உங்களுக்கு திடீரென ஒரு ஃபோன் கால் வருகிறது.. சாதாரண லேண்ட் லைன் நம்பரில் இருந்து அந்த கால் வருவது போல இருக்கும். அதை எடுத்துப் பேசினால்.. நீங்கள் அனுப்பிய பார்சல் சில காரணங்களால் மும்பை சுங்கத் துறை அலுவலகத்தில் சில காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்துக் கூடுதல் தகவல்களைப் பெற 9ஐ அழுத்துங்கள் எனச் சொல்வார்கள். எதாவது நிறுவனத்திடம் இருந்து நமக்கு சர்வீஸ் கால் வந்தால் எப்படி இருக்குமா.. அச்சு அசலாக அதுபோலவே இது இருக்கும்.

நாம் யாருக்கும் பார்சல் அனுப்பவில்லையே எனக் குழம்புவீர்கள்.. சரி கஸ்டமர் கேரிடமே கேட்போம் என 9ஐ அழுத்தினால் அது தான் நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறின் தொடக்கமாக இருக்கும். எதிர்முனையில் பேசும் நபர் டிப்டாப்பாக ஆங்கிலத்தில் பேசுவார்கள். நீங்கள் ஆஸ்திரேலியா அல்லது சிங்கப்பூருக்கு (எதாவது ஒரு வெளிநாடு பெயரைச் சொல்வார்கள்) அனுப்பிய பார்சலில் போதைப் பொருள் இருப்பதாகச் சொல்வார்கள். உடனே உங்களுக்கு ஷாக் அடித்தது போல இருக்கும்.

மிரட்டல் வரும்: நான் எதுவும் பார்சல் அனுப்பவில்லையே எனக் கேட்டால்.. இல்லை உங்கள் பெயரில் தான் அனுப்பி இருக்கிறார்கள்.. உங்கள் ஆதார் பெயர், மொபைல் நம்பர் எல்லாம் இருக்கிறது எனச் சொல்வார்கள். அப்படியே நம்மிடமே மெல்லக் கேட்டு எல்லா தகவல்களையும் வாங்கிவிடுவார்கள். பிறகு கொஞ்ச நேரம், ஆதார் கார்டை எப்படிப் பாதுகாப்பாக யூஸ் செய்ய வேண்டும் அட்வைஸ் செய்வது போலப் பேசுவார்கள். அப்போது திடீரென அவர்கள் டோன் மாறும்.

அதாவது ஹெட் ஆபீசில் இருந்து ஆர்டர் வந்ததாகவும் மோசடியில் ஈடுபட்டதற்காக உங்களைக் கைது செய்ய வேண்டும் என்பார்கள். இடையில் வீடியோ காலிலும் வந்து போலீஸ் யூனிபார்மில் கூட ஒருவர் பேசுவார். தொடர்ந்து உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அனைத்து தொகையையும் மாற்ற வேண்டும் என்றும் உங்களுக்கு இந்த மோசடியில் தொடர்பு இல்லை என தெரிந்தால் அந்த தொகையைத் திரும்பத் தருவோம் என மிரட்டும் தொனியில் பேசி வாங்கிவிடுவார்கள். இதன் பெயர் தான் டிஜிட்டல் அரஸ்ட்.

என்ன செய்ய வேண்டும்: சரி, இந்த மோசடியில் எப்படி ஏமாறாமல் இருக்க வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இப்படி பார்சல் மட்டுமின்றி, உங்கள் மொபைலை தவறாகப் பயன்படுத்துவதால் பிளாக் செய்கிறோம், உங்கள் வங்கிக் கணக்கில் மோசடிக்காரர் பணம் போட்டுள்ளார் எனப் பல விதங்களில் பொய் சொல்வார்கள் கவனம்.

முதலில் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.. எந்தவொரு அரசு அதிகாரியும் உங்களை போனில் தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்க முடியுமே தவிர டிஜிட்டல் அரஸ்ட் செய்ய முடியாது. அதற்குச் சட்டத்திலேயே இடமில்லை. மேலும், ஒருவரைக் கைது செய்ய அல்லது விசாரணைக்கு அழைக்க நீதிமன்ற உத்தரவு அல்லது போலீஸ் சம்மன் தேவை. அதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதைச் செய்யுங்கள் போதும்: எனவே, இதுபோன்ற மோசடி கால் வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ஒரே விஷயம் தான்.. ஆதார், வங்கிக் கணக்கு என எந்தவொரு தகவலையும் பகிராதீர்கள். வீடியோ காலுக்கு நிச்சயம் நோ சொல்லுங்கள்.. எதிர்த் தரப்பில் என்ன சொல்லி மிரட்டினாலும், போலீஸ் ஸ்டேஷன் வாங்க அங்கு பேசிக்கலாம் என சொல்லுங்கள்.. அதையும் தாண்டி மிரட்டினால் கட் செய்துவிட்டு நேரடியாக போலீஸ் நிலையத்திற்குச் செல்லுங்கள்.. மற்றவற்றை போலீசார் பார்த்துக் கொள்வார்கள்.!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+