கண்முன்னே கிலோ கணக்கில் தங்கம்.. சபலப்பட்ட மேனேஜர்! கோவா டூர் போனவர்களுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள பிரபல நகைக்கடையில் சுமார் ஒன்றரை கிலோ எடை கொண்ட தங்க நகைகளை இரண்டு ஆண்டுகளாக திருடி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த மேலாளர் உட்பட மூன்று பேர் சிக்கி உள்ளனர். சிறிது சிறிதாக நகையை எடுத்து விற்று அதன் மூலம் கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்த்து ஏற்றத்தில் உள்ளது. 1 பவுன் தங்கம் தற்போது ரூ.1 லட்சத்தை விற்பனையாகி வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது இனிமேல் கனவில் தான் நடக்கும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் நகைக்கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கோ தினந்தோறும் விதவிதமான நகைகளை பார்த்தாலும் அதனை அனுபவிக்க இயலாது என்ற நிலை இருக்கும். தமிழில் ஒரு பழமொழி உண்டு. தேனை விற்பவர்கள் அதை ருசித்து பார்க்காமல் இருக்க மாட்டார் என்பார்கள்.

திண்டுக்கல் தங்கம் திருட்டு
அப்படித்தான் நகைக்கடையில் வேலை பார்த்த ஊழியர்களே கூட்டாக சேர்த்து நகை திருட்டில் ஈடுபட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் நகரின் மத்தியில் செயல்படும் பிரபலமான நகைக்கடையில் திண்டுக்கல்லை சேர்ந்த ரேணுகேசன் என்பவர் துணை பொது மேலாளராக உள்ளார். இவர் அந்த கடையில் விற்பனை நேரம் முடிந்த பிறகு தணிக்கையாளரான வைஷ்ணவியுடன் நகை இருப்பு குறித்து சோதனை மேற்கொண்டார்.
நகைக்கடை ஊழியர் மோசடி
அப்போது நெக்லஸ் பிரிவில் தணிக்கை செய்த போது 125 பவுன் எடையுள்ள 45 எண்ணிக்கை கொண்ட நெக்லஸ்கள் குறைவாக கண்டு இருந்தது பிடிக்கப்பட்டது. சுமார் 1.5 கிலோ எடை கொண்ட இந்த நகைகளின் மதிப்பு ரூ.1 கோடியே 43 லட்சத்தி 23 ஆயிரத்து 202 ஆகும். இதுகுறித்து ரேணுகேசன் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். தரைதளத்தின் மேலாளர் பாலசுப்பிரமணியன் அந்த சமயத்தில் பொறுப்பு மேலாளராக இருந்த திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்த்த சிவா (29), அதே தளத்தில் பணியில் இருந்த நாகல்நகரை சேர்ந்த கார்த்திகேயன் (43). விற்பனையாளர் விநாயகன் (36) மூலமாக வாடிக்கையாளர்களுக்கு நகை காட்ட எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
1.5 கிலோ தங்கம்
இதுகுறித்து திண்டுக்கல் எஸ்.பி.யிடம் இ துணை பொது மேலாளாளர் ரேணுகேசன் புகார் அளித்தார். புகார் தொடர்பாக நடத்த குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். விசாரணையில், நகைக்கடையின் மேலாளரான சிவா. அதே தளத்தில் பணிபுரிந்த செல்வராஜ், கார்த்திக், செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன், வக்கம்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் ஆகியோர் சேர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
இந்த திருட்டு சம்பவத்தில் சிவா, கார்த்திகேயன். விநாயகள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 80 கிராம் நகைகளை மீட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், நகை திருட்டில் கடுபட்ட 7 பேருமே 15 முதல் 20 வருடங்கள் இதே நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதற்கு மூளையாக செயல்பட்டது பொறுப்பு மேலாளராக இருந்த சிவா என்பவர்தான்.
கோடி ரூபாய் நகை
இவர் வசதியாக வாழவேண்டும் என்பதற்காக நகை திருட்டில் ஈடுபட முயன்றுள்ளாார். தான் ஒருவரால் இதனை செய்ய முடியாது என்பதால் அதே தளத்தில் பணிபுரிந்த மேலும் சிலரையும் உதவிக்கு அழைத்துக் கொண்டார். அவர்களது வறுமையை காரணம் காட்டி ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றால் இதை தவிர வேறு வழியில்லை என அவர்களுக்கு மூளை சலவை செய்துள்ளார். இதனால் அவர்களும் சிவாவின் திட்டத்திற்கு உடந்தையாக இருந்துள்ளனர். கடந்த 2 வருடமாகவே சிறுக சிறுக இதேபோல் நகையை திருடி வந்துள்ளனர். ஆரம்பத்தில் யாரும் கண்டுபிடிக்கவில்லை என்பதால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து தங்கள் கைவரி சையை காட்டியுள்ளனர்.
ஆடம்பர சுற்றுலா
திருடிய நகையை விற்று அதில் கிடைத்த பணத்தில் திண்டுக்கல் ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மதுபான பாரில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். மேலும் பெங்களூளூர், கோவா போன்ற ஊர்களுக்கு உல்லாச சுற்றுலா சென்று வந்துள்ளனர். தங்கள் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் தெரியாமல் இருந்து வத்துள்ளனர். தற்போது 3 பேர் சிக்கியுள்ள நிலையில் மற்ற 4 பேரை அவர்களது செல்போன் மூலம் இருப்பிடத்தை ஆராய்ந்து வருகின்றனர். பிரபலமான நகைக்கடையில் சி.சி.டி.வி காமிரா, தினசரி சோதனை உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் ஊழியர்களே ரூ.1.43 கோடி மதிப்பிலான நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications