ரொம்ப காலமாக பேசி வரும் திண்டுக்கல் லியோனிக்கு.. கொ.ப.செ பதவி.. திமுக தந்த திடீர் பரிசு!

திமுக கொள்கை பரப்புச் செயலாளர்கள் பொறுப்பில் திரு. திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் முனைவர் சபாபதி மோகன் அவர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் முனைவர் சபாபதி மோகன் ஆகியோர், கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்கள் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுகவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். திமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த அ.ராசா துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கத்தமிழ் செல்வன் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Dindigul Leoni and Sabapathy Mohan have been appointed as DMK propaganda secretary

திமுகவில் இரண்டு கொள்கை பரப்பு செயலாளர்கள் பதவி காலியாக இருந்ததை அடுத்து இன்று புதிய கொள்கை பரப்பு செயலாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கை

Dindigul Leoni and Sabapathy Mohan have been appointed as DMK propaganda secretary

திமுக கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஆ. ராசா எம்பி துணை பொதுச் செயலாளராகவும் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவர்கள் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஏற்கனவே கொள்கை பரப்புச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்பி அவர்களுடன், கழகசட்டதிட்ட விதி 18, 19ம் படி திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் முனைவர் சபாபதி மோகன் ஆகியோர், கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்கள் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியராக பணியை தொடங்கிய திண்டுக்கல் லியோனி பட்டிமன்ற நடுவராகவும் மேடைப்பேச்சாளராகவும் வலம் வந்தவர். கலைஞர் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பல ஆண்டுகாலமாக திமுகவில் இருந்த அவர் சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் காலங்களில் திமுகவிற்காக பிரச்சாரம் செய்துள்ளார். இப்போது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+