டம்மி துப்பாக்கி, அட்டகத்தி, அரசியல் மக்கு! தவெக விஜய்யை ஒருமையில் விமர்சித்த திண்டுக்கல் லியோனி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டம்மி துப்பாக்கி, அட்டகத்தி, அரசியல் மக்கு ஒன்று ஹா, ஹுனு கத்திக்கிட்டு இருக்கு என தவெக தலைவரும் நடிகருமான விஜய்யை, திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சித்துள்ளார். அதிலும் ஒருமையில் அவர் பேசியுள்ளது தவெகவினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் லியோனி திமுகவின் கொள்கை பரப்புச் செயலாலராக இருந்து வருகிறார். இவர் ஒரு கூட்டத்தில் பேசுகையில் டம்மி துப்பாக்கி, அட்டகத்தி, அரசியல் மக்கு ஒன்னு மேடைல ஹா, ஹுனு கத்திக்கிட்டு இருக்கு. காலைல நாய் ஒன்னு சூரியன் பின்னாடி இருக்கிறது தெரியாம நின்று, தனது நிழல் பெருசா தெரியறத பார்த்து "ஆ நாமதான் பெரிய ஆள், 2026 ஆம் ஆண்டு நாம்தான் என கத்திக்கிட்டு இருக்கு.

vijay

நேரம் ஆக ஆக சூரியன் மேல வந்தா, அந்த நாயோட நிழல் கூட தெரியாது. சூரியன் பவரை காட்டினா நம்ம இருக்கிற இடம் தெரியாம போய்டுவோம். இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளார். அதிலும் அரசியல் நாகரீகம் இல்லாமல் ஒருமையிலும் நாய் என்றும் விமர்சித்திருப்பதற்கு பலர் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

டிசம்பர் மாதம்

அது போல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெல்லையில் பொதுக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி, நேற்று கட்சி ஆரம்பித்த ஆட்களெல்லாம் இன்னும் 2 ஆண்டில் முதல்வர் நாற்காலியில் வரப்போகிறேன் என சொல்லிக் கொண்டு நெஞ்சில் குடியிருக்கும் என்கிறார்கள்.

நெஞ்சில் குடியிருக்கும்

குடியிருக்கிறவர்கள் என்பதற்கு எப்போது வேண்டுமானாலும் காலி செய்துவிட்டு போய்விடுவார்கள் என்றுதான் அர்த்தம். ஆனால் கலைஞர் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என சொன்னார். உடன்பிறப்புகளே என்பது இரு பாலரையும் குறிக்கும்.

வாடகைக்கு, லீஸுக்கு

நெஞ்சில் குடியிருப்பவர்கள் வாடகைக்கும், லீஸுக்கும், ஓசிக்கும் கூட குடியிருப்பார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஓடிப்போய் விடுவார்கள். பணம் கொடுத்தால் இருப்பார்கள் கொடுக்கவில்லையென்றால் ஓடுவார்கள்.

5 நாட்களில் தொப்பை குறைய

கட்சி ஆரம்பித்த 2வது வருடத்தில் ஆட்சி பிடிப்பது நடக்கிற காரியமா? 5 நாட்களில் தொப்பை குறைய வேண்டுமா? கருப்பாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம்... என்பது விளம்பரங்களுக்கு மட்டும்தான் நன்றாக இருக்கும். அரசியல் இயக்கம் தொடங்கி எவ்வளவு பெரிய பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் மியூசிக்கல் சேர் விளையாட்டு போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

முதல் பொதுக் குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில் தோழர்களே தோழிகளே! கதறல் சப்தம் எப்படி இருக்கிறது என விஜய் கேட்டதும் கூட்டத்தில் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

எது அரசியல்

மேலும் விஜய் தொடர்கையில், எல்லா குடும்பமும் நன்றாக வாழுறது அரசியலா இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் சுரண்டி சுரண்டி நல்லா வாழுறது அரசியலா? நீங்களே சொல்லுங்கள்..

திராவிட மாடல்

கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல். மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சி நமக்கு எதிராக செய்யும் ஒன்றா, இரண்டா? விக்கிரவாண்டி மாநில மாநாடு, புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் போராட்டம், தவெக பொதுக் குழுவுக்கு தடைகள் என மாற்றி மாற்றி குடைச்சல் கொடுத்தீங்க.

மன்னராட்சி முதல்வர்

ஏற்கெனவே அர்ஜுன், நிர்மல்குமார், ரமேஷ் உள்ளிட்டோர் நல்லா அடித்துவிட்டார்கள். நாமும் அடிக்கணுமானு யோசனையா இருக்கு. (திமுக, பாஜகவை விமர்சிப்பதை குறித்து கூறுகிறார்). மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பேர மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் காட்டணும்.

நெருக்கடி ஏன்

மத்திய அரசு பாசிஸம் செய்றதுனு சொல்றீங்களே நீங்கள் செய்யுறதும் பாசிச ஆட்சிதானே! நான் என் நாட்டு மக்களை சந்திக்கக் கூடாது என எனக்கு தடை போட நீங்கள் யாரு சார்? நேற்று வந்தவன் முதல்வரா என கேட்கிறீர்கள். அப்போ எனக்கு ஏன் இவ்வளவு நெருக்கடி கொடுக்கிறீர்கள்.

காற்றை தடுக்க முடியாது

அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், ஆனால் காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறினால் அது சூறாவளியாகவோ சக்திமிக்க புயலாக மாறும் என விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+