ஸ்டாலினுக்கு நெருக்கம்! ஆட்சி -கட்சியில் முக்கியப் பதவி! ஆனாலும் திண்டுக்கல் லியோனிக்கு வந்த சோதனை!
சென்னை: திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான திண்டுக்கல் லியோனிக்கு சென்னை போக்குவரத்து போலீஸார் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
திண்டுக்கல் லியோனி அரசாங்க இலச்சினையுடன் அரசு கொடுத்த இன்னோவா காரை பயன்படுத்தி வரும் நிலையில் அதற்கு ரூ.2,500 ஐஅபராதம் விதித்து தண்டம் கட்டச் சொல்லியுள்ளது சென்னை ஆலந்தூர் பகுதி போக்குவரத்து போலீஸ்.

ஆட்சியிலும் -கட்சியிலும் முக்கியப் பதவிகளில் இருக்கும் திண்டுக்கல் லியோனிக்கே இது தான் நிலை என்பது யதார்த்தமாகும்.
பட்டிமன்ற மேடைகளில் 'நகைச்சுவைத் தென்றல்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படக் கூடியவர் திண்டுக்கல் லியோனி. மேடைகளில் 'டைமிங் ஜோக்ஸ்' அடிப்பதில் கெட்டிக்காரர்.
அதேபோல் பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, கருத்தரங்கமாக இருந்தாலும் சரி, விவாத மேடைகளாக இருந்தாலும் சரி, பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும், தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால், பார்வையாளர்களை தன்வசப்படுத்தக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு.
பட்டிமன்றங்கள் மூலமாக மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி பகுத்தறிவு கருத்துகளை பரப்பக்கூடியவர். இதன் காரணமாக தான் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் கவனத்தை ஈர்த்து திமுகவுக்கு அழைக்கப்பட்டார்.
கடந்த 2006ஆம் ஆண்டு தான் இவர் திமுகவில் இணைந்தலும் கூட அதற்கு முன்பும் திமுக அனுதாபியாக கருப்பு சிவப்பு வேட்டி கட்டாமல் ஆசிரியராக இருந்தவர்.
இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட திண்டுக்கல் லியோனியை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட திண்டுக்கல் லியோனிக்கே அபராதம் என்ற பெயரில் விபூதி அடிக்கப்பட்டிருப்பது தான் இங்கு குறிப்பிடத்தக்கது.
கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர், எக்ஸ்ட்ரா பம்பர், நம்பர் பிளேட் ஆகிய மூன்று காரணங்களுக்காக ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications