விஜய் தொகுதியில் திண்டுக்கல் லியோனியை நோக்கி பாய்ந்து வந்த பாட்டில்.. பிரச்சாரத்தில் அதிர்ச்சி!
திருச்சி: திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திண்டுக்கல் லியோனி மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியில் திண்டுக்கல் ஐ.லியோனி மீது மது பாட்டில் வீசப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் 234 தொகுதிகளிலும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய், திமுக சார்பில் இனிகோ இருதயராஜ், அதிமுக சாா்பில் க. ராஜசேகரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவா் வி. கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் என். கோபிநாத் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ்க்கு ஆதரவாக அந்த தொகுதிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியில் திண்டுக்கல் ஐ. லியோனி இன்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். வேனில் இருந்து அவர் பேசிக் கொண்டிருந்தபோது அவரை நோக்கி காலி மது பாட்டிலை மர்ம நபர் ஒருவர் வீசி உள்ளார்.
அந்த பாட்டில் திண்டுக்கல் லியோனி நின்று பேசிக்கொண்டிருந்த பிரச்சார வேனில் விழுந்து உடைந்து சிதறியது. இதில் நல்வாய்ப்பாக திண்டுக்கல் லியோனிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. மது பாட்டிலை வீசிய நபர் யார் என்பது குறித்தும் என்ன காரணத்திற்காக வீசினார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில், புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளரும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவருமான திண்டுக்கல் லியோனி பிரச்சார வேன் மீது மது பாட்டில் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications