ஓவர் நைட்டில் மனசு மாறிய செங்கோட்டையன்! விருந்துக்கு போகல. காலையில் வேற மாதிரி.. பின்னணியில் பாஜக!
சென்னை: நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி அளித்த ஸ்பெஷல் விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன் இன்று சட்டசபையில் "எடப்பாடியார்" எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். ஓவர் நைட்டில் எப்படி இந்த மாற்றம் என்பது பற்றி அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரபரக்கின்றன.
பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது அதிமுக. இந்தநிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு, கட்சி எம்.எல்.ஏக்களுக்கு விருந்து கொடுத்தார். அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு சைவ மற்றும் அசைவ உணவுகளுடன் எடப்பாடி பழனிச்சாமி விருந்து அளித்தார்.

எடப்பாடி விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்
இந்த இரவு விருந்தில் அதிமுக மூத்த தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள் என பலரும் பங்கேற்றனர். சில முன்னாள் எம்.பிக்களும் பங்கேற்றனர். அவர்களுடன் அமர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் சாப்பிட்டுள்ளார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அளித்த இந்த விருந்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
கடந்த சில வாரங்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை சொல்வதையே செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து டெல்லி சென்று அமித் ஷாவை தனியாக சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பாஜக - அதிமுக கூட்டணி
பாஜக தலைமை, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க செங்கோட்டையனை வைத்து காய் நகர்த்துவதாகவும் கூறப்பட்டது. அண்மையில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை உறுதி செய்தார். எடப்பாடி பழனிசாமி உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதனை அறிவித்தார் அமித் ஷா.
ஈரோட்டில் கடந்த வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்ததாக கூறினார். அப்போதும் எடப்பாடியார் என பெயரைக் குறிப்பிடவில்லை. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அளித்த விருந்தில் செங்கோட்டையன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்காததால் குழப்பம் எழுந்தது.
எடப்பாடியாரை வணங்கி - செங்கோட்டையன்
இந்நிலையில், சட்டசபையில் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. இன்று பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி தொடர்பான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடந்தது. அப்போது பேசிய செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசினார். எடப்பாடியாரை வணங்கி உரையை ஆரம்பிப்பதாக செங்கோட்டையன் குறிப்பிட்டார் "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரை வணங்கி உரையைத் தொடங்குகிறேன்' எனத் தெரிவித்தார் செங்கோட்டையன்.
செங்கோட்டையன் இவ்வாறு பேசியது அதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல் ஆளுங்கட்சி மற்றும் பிற கட்சி எம்எல்ஏக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே இருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டதா எனப் பலரும் புருவம் உயர்த்தினர். நேற்று இரவு ஈபிஎஸ் அளித்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன் இன்று காலையிலேயே எடப்பாடியார் எனக் குறிப்பிட்டுப் பேசியது விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
பின்னணி என்ன?
நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்து நிகழ்வை பாஜக புள்ளிகள் உன்னிப்பாக கவனித்துள்ளனர். யார் யார் அழைப்பு விடுத்தும் பங்கேற்கவில்லை என அதிமுகவின் முக்கிய புள்ளிகளிடம் இருந்து அப்டேட் பெற்றதாக கூறப்படுகிறது. செங்கோட்டையன் இந்த விருந்தை புறக்கணித்த தகவல் கிடைத்ததுமே நேற்று இரவோடு இரவாக செங்கோட்டையனுக்கு பாஜக தரப்பிடம் இருந்து போன் அழைப்பு பறந்துள்ளது.
இது அமித் ஷா உறுதி செய்த கூட்டணி. கூட்டணிக்குள் இணக்கம் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என அமித் ஷா கூறி இருக்கிறார். கட்சிக்குள் இருக்கும் அதிருப்திகளைச் சரி செய்ய வேண்டும் என அமித் ஷா சொன்ன அறிவுறுத்தலின்படி தான் எடப்பாடி விருந்து கொடுத்தார். அதையும் புறக்கணித்து இருக்கிறீர்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி செயல்பட்டால் இரு கட்சிகளுக்குமே நல்லதல்ல, தொண்டர்களும் உற்சாகம் இழப்பார்கள். எனவே எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை கைவிட்டு இணக்கமாகச் செல்லுங்கள் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஓவர் நைட்டில் நடந்த மாற்றம்
இந்தச் சூழலில் தான் இன்று சட்டசபையில் பேசிய செங்கோட்டையன், எடப்பாடியாரை வணங்கி" என்று தனது பேச்சை செங்கோட்டையன் தொடங்கி இருக்கிறாராம். செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது கொண்டிருந்த அதிருப்தி விவகாரத்தையும் அமித் ஷா கட்டளைப்படி பாஜகவே தீர்த்து வைத்திருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரத்தினர். செங்கோட்டையன் இனி எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கத்தைக் கடைபிடிப்பாரா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications