திருத்தணி கோயிலுக்குள்.. மாஸ்குடன் விறுவிறுன்னு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. அடுத்து செய்த செயல்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் பச்சை நிறத்தினால் ஆன பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2012ல் தனுஷை வைத்து இயக்கிய 3 படத்தின் மூலம் சினிமா இயக்குனராக அறிமுகம் ஆனார். அதற்கு முன்னதாகவே அவர் 2003ல் விசில் திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேலே ஆசை தான் பாடலை பாடியிருக்கிறார்..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஸ்டார் விஜய்யின் நடனப் போட்டியான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் நடிகர்கள் சங்கீதா மற்றும் ஜீவாவுடன் நடுவராக இருந்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷை பிரிவதாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர்கள் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு தற்போது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் தீவிர பற்றுக்கொண்டவர். அடிக்கடி கோயில்களுக்கு சென்று வருகிறார். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களுக்கு அடிக்கடி சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிக்கு இன்று வந்தார். அவர் கோயிலுக்குள் நுழையும் போது மாஸ்க் அணிந்தபடி உள்ளே வந்தார்.
பின்னர் சுவாமியை தரிசனம் செய்யும் போது மாஸ்கை கழட்டிய அவர், பின்னர் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோயிலில் சிறிது நேரம் அமர்ந்து கண்ணை மூடியபடி முருகனை பிராத்தித்தார். அதைதொடர்ந்து அவருக்கு கோயில் ஊழியர்கள், பச்சை நிறத்தினாலா பொன்னாடை அணிவித்ததுடன், கோயில் பிரசாதங்களை வழங்கினார்கள். தொடர்ந்து புறப்பட்டு செல்லும் முன்பு கோயில் ஊழியர்கள் அவருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். தொடர்ந்து அவர்களுடன் செல்பி எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மறுபடியும் மாஸ்க் அணிந்து கொண்டு கோயிலை விட்டு வெளியேறி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications