தூங்கி எழுந்து கண்ணை முழிச்சு பார்த்தால் 2 பேர் துப்பாக்கியோட நின்னாங்க.. இயக்குநர் அமீர் கலகல
சென்னை: அமலாக்கத் துறை ரெய்டு நடத்திய போது தூங்கி எழுந்து கண்ணை முழிச்சு பார்த்தால் இரண்டு பேர் துப்பாக்கியுடன் நிற்கிறார்கள் என இயக்குநர் அமீர், ரெய்டு குறித்து விளக்கினார்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் அமீரிடம் டெல்லி என்சிபி விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை சோதனையும் நடந்தது.

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் உயிர் தமிழுக்கு அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் அமீர், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், மகாநதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய அமீர், என் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு 2 நாட்கள் நடந்தன. என் வீட்டில் ரம்ஜான் பண்டிகைக்காக எல்லாருமே ஊருக்கு போய்விட்டார்கள்.
இந்த வழக்கு குறித்து யாருக்குமே உண்மையான காரணம் தெரியாது. எனக்கு அமலாக்கத் துறையிடம் இருந்து முதல் சம்மன் வந்ததே யாருக்கும் தெரியாது. அதை வழக்கறிஞர் வெளியே போய் சொன்னதால்தான் தெரியும். நான் ரம்ஜான் முடித்துவிட்டு விசாரணைக்கு ஆஜராவதாக கடிதம் எழுதியதாக பொய் செய்திகள் உலா வந்தன.
ஏப்ரல் 2 ஆம் தேதி சம்மன், நான் முதல் ஆளாக டெல்லி என்சிபி அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன். அங்கு 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அது எல்லாத்தையும் முடித்துவிட்டு வந்தேன். அப்போதே என்னை மீண்டும் விசாரிக்கும் திட்டம் இருந்தது. அது யாருக்குமே தெரியாது. அவர்கள் கேட்ட ஆவணங்களை எல்லாம் நான் தயார் செய்து வைத்திருந்தேன்.
அமலாக்கத் துறை ரெய்டு நடந்த நாள் அன்று அதிகாலை 5 மணிக்கு நோன்பு திறந்துவிட்டு காலை உணவு சாப்பிட்டுவிட்டு படுத்திருந்தேன். எனது நண்பரும் நானும்தான் படுத்திருந்தோம். அப்போது அவர் என்னை எழுப்பினார். நானும் முழித்து பார்த்த போது இருவர் என் முகத்திற்கு நேராக துப்பாக்கியுடன் நின்றனர்.
அப்பறம் யார் என கேட்ட போதுதான் அமலாக்கத் துறை என தெரியவந்தது. என் வீட்டுக்கு வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு என் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு எனது உதவியாளர்கள், ஆடிட்டர் உள்ளிட்டோரை வெளியே வர முடியாதபடி லாக் செய்துவிட்டார்கள்.
அமலாக்கத் துறை இயக்குநர், பெண். அவர் என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். ரிஃபெரஷ் ஆகிவிட்டு வருவதாக கூறிவிட்டு வந்தேன். அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தேன். அன்று மதியம் 12 மணி வரை விசாரணை நடந்தது. அவர்கள் சென்றுவிட்டார்கள். நான் கிளம்பி ரம்ஜானுக்காக மதுரை சென்றுவிட்டேன்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தேன். அதன் பிறகும் ஒரு சம்மன் வந்தது. அதுவும் யாருக்கும் தெரியாது. அந்த சம்மனுக்கு ஆஜராகி பத்தரை மணி நேரம் விசாரணையை முடித்துவிட்டுத்தான் இங்கு வந்தேன். நான் இந்த விசாரணை முடியும் வரை இங்குதான் இருப்பேன். வெளியூருக்கெல்லாம் செல்ல மாட்டேன்.
நான் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில் அளிக்க முடியாததால் என்னை குற்றவாளியாக்க முயற்சிக்கிறீர்கள். நான் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டேன். ஆனால் எனது மகனும் மகளும்தான் மன உளைச்சல் அடைந்தார்கள். பிறகு அவர்கள்தான் இன்று எனக்கு துணையாக தைரியம் கொடுக்கிறார்கள். இவ்வாறு அமீர் தெரிவித்திருந்தார்.
-
Heavy Rain: சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
எடப்பாடி ரொம்ப டென்ஷன் ஆகுறாரு.. இனி கெட்டவார்த்தையில் பேசுவார் போல! கலாய்த்த உதயநிதி -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்! -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம்












Click it and Unblock the Notifications