விஜய்யை காட்டமாக விமர்சித்து பேசிக்கொண்டு இருந்த அமீர்.. பக்கத்திலேயே நின்று இளைஞர் செய்த காரியம்
சென்னை: இயக்குநர் அமீர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் அணுகுமுறையை மாற்ற வேண்டும் எனக்கூறி அமீர் ஆவேசமாக பேசிக்கொண்டு இருந்த போது திடீரென அவருக்கு அருகில் நின்ற இளைஞர் ஒருவர், விஜய் புகைப்படம் இடம் பெற்று இருந்த கீ செயினை கேமரா முன்பாக காட்டிவிட்டு சிரித்தார்.
இளைஞரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மாற்று கட்சி மற்றும் கருத்து கொண்ட பிரமுகர்கள் பேசும் போது தவெகவினர் இப்படி நடந்து கொள்வது அநாகரீமானது என்றும் வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

தனி விமானத்தில் விஜய் பயணம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை இயக்குநர் அமீர் கடுமையாக விமர்சித்து இன்று பேட்டி அளித்தார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமீர், "ஸ்டாலினை நான் பலமுறை விமானத்தில் சந்தித்து இருக்கிறேன். ஆனால் நீங்கள் (விஜய்) தனி விமானத்தில் பயணம் செய்கிறீர்கள்.
அங்குதான் சிக்கல் தொடர்கிறது. மக்களோடு நீங்கள் பயணித்தால் மக்கள் உங்களுக்கு சுட்டிக்காட்டுவார்கள். 'நான் உங்கள் ரசிகன் தான். உங்கள் பேச்சில் இந்த வார்த்தை வேண்டாம்' என்று சுட்டிக்காட்டுவார்கள். நீங்கள் தனி விமானத்தில் போய்விட்டு வந்தால் மக்கள் கிட்ட எப்போதான் பேசுவீங்க? கட்சி ஆரம்பித்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. இதுவரைக்கும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை.
ஹிட்லரை விட மிகப்பெரிய சர்வாதிகாரி
என்னதான் செய்யப் போறீங்க? உலகத்தில் ஹிட்லரை விட மிகப்பெரிய சர்வாதிகாரி யாரும் இல்லை. அவர் பேசும் போது கூட அவரது தொண்டர்கள் உட்கார்ந்து கொண்டு இருப்பார்கள். அவரது சக அதிகாரிகள் உட்கார்ந்து கொண்டு இருப்பார்கள். இந்திய வரலாற்றிலேயே ஒரு தலைவர் பேசிக்கொண்டு இருக்கிறார்.. ஏழு பேர் நின்று கொண்டு இருக்கிறார்கள் என்றால், அது தவெக மாநாட்டில் பார்க்க முடிந்தது" இவ்வாறு அமீர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டு இருந்தார்.
அமீருக்கு பின்னால் நின்ற இளைஞர்
அப்போது அமீருக்கு பின்னால் கருப்பு சட்டை அணிந்தபடி நின்ற இளைஞர் ஒருவர் தனது கையில் தவெக விஜய் படம் பொறித்த கீச்செயினை எடுத்து செய்தியாளர்களின் கேமரா முன்பாக காட்டினார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோவையில் பாஜகவில் சேர்ந்த எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போதும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் திடீரென தனது செல்போனை எடுத்து விஜய் புகைப்படத்தை கேமரா முன்பாக காட்டினார்.
வானதி சீனிவாசன் கருத்து
இது தெரியாமல் வானதி சீனிவாசன் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டு இருந்தார். இந்த நிகழ்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பின்னர் இது குறித்து பேசிய வானதி சீனிவாசன், "யார் வேண்டுமானாலும் எங்கள் பின்னால் வந்து புகைப்படத்தை காட்டும் அளவிற்கு கருத்து சுதந்திரத்தை பாஜக அனுமதிக்கிறது.
ட்ரோல், மீம்ஸ், காமெடி என எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மற்றொரு கட்சியில் இது போன்று செய்ய முடியுமா? அப்போது யார் பாசிசம்? எங்கு சட்டம்? யார் கருத்து சுதந்திரம்? என்பது தெரியவரும் என பதில் அளித்தார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications