உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்..அட்லீக்கு வந்த ஹேப்பி நியூஸ்.. இனி டாக்டர்னு தான் கூப்பிடனும்!
சென்னை: தமிழ் திரையுலகில் துணை இயக்குனராக அறிமுகம் ஆகி தற்போது பாலிவுட் வரை உயர்ந்து இருக்கிறார் இயக்குனர் அட்லீ. பழைய கதைகளை எடுக்கிறார் என விமர்சனம் இருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை, அசத்தலான மேக்கிங் மூலம் தொடர் வெற்றி பெற்று இருக்கும், அவருக்கு தற்போது மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. பிரபலமான சத்தியபாமா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இனி டாக்டர் அட்லீ என அவர் அன்போடு அழைக்கப்படுவார் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
தமிழ் திரை உலகில் கனமான கதாபாத்திரங்களை வைத்தே படம் இயக்கிய நிலையில் கமர்சியலாக அதையும் பிரம்மாண்டமாக கொடுத்து வெற்றி பெற முடியும் என நிரூபித்தவர் இயக்குனர் சங்கர். ஜென்டில்மேன் தொடங்கி முதல்வன், சிவாஜி, எந்திரன் என அவரது படங்கள் மெகா ஹிட் அடித்தன.
அவரது பட்டறையில் பயின்றவர் தான் அட்லீ. துணை இயக்குனராக தனது வாழ்வை தொடங்கிய அவர் சங்கரிடம் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பது, பிரம்மாண்டமான மேக்கிங் ஆகியவற்றை கற்றுக் கொண்டார்.

சங்கரின் துணை இயக்குனர் என்ற பெயரை அவருக்கு சினிமாவில் வெறும் வரவேற்பை கொடுத்தது. முதல் படத்திலேயே ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா என நட்சத்திர பட்டாளத்தை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கினார். அந்த படம் மெகா ஹிட் அடைந்த நிலையில் கோலிவுட் இயக்குனர்கள் பட்டியலில் சேர்ந்தார். அதற்கு பிறகு விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார்.
அதுவே அவருக்கு பாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பதான் கொடுத்த வெற்றியை விட ஜவான் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்திய அளவில் அந்த படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அள்ளி அசாத்திய சாதனை படைத்தது. இதனால் உற்சாகமடைந்த ஷாருக் கான், அடுத்தடுத்த படங்களில் அவரை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் இயக்குகிறார் அட்லி ஹாலிவுட் தரத்தில் இந்த படம் தயாராக இருப்பதாகவும், இந்திய சினிமாவில் முக்கிய படங்களில் ஒன்றாக இது இருக்கும் என்கின்றனர்.
இப்படி அட்லி தொட்டதெல்லாம் வெற்றியாக அமைந்திருக்க தற்போது அவருக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சத்தியபாமா பல்கலைக்கழகம் அட்லிக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. அட்லியின் திரை பயணத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக சத்தியபாமா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.
வருகின்ற ஜூன் 14ஆம் தேதி சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் 35 வது பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில் அப்போது அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது ரசிகர்களை கவரும் வணிக அம்சம், தொழில்நுட்ப திறமை காரணமாக அந்த பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப துறை மூலமாக இந்த பட்டம் வழங்கப்பட உள்ளது. இது அட்லீயின் திரை வாழ்வில் முக்கியமான தருணமாக இருக்கும் என வாழ்த்து கூறி வருகின்றனர் ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications