"வெற்றி துரைசாமிக்கு கூட.." பவானி ஆறு சர்ச்சையை வதந்தி என்ற போலீஸ்! புது வீடியோ வெளியிட்ட பாக்யராஜ்
சென்னை: பவானி ஆற்றில் குளிக்க வருவோரைச் சிலர் திட்டமிட்டுக் கொல்வதாக இயக்குநர் பாக்யராஜ் கூறிய வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து அவரே மீண்டும் ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் வெளியூரிலிருந்து வந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் (வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில்) குளிப்பவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படுவதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.

இந்த வீடியோ டிரெண்டான நிலையில், இதற்கு போலீசார் விளக்கமளித்திருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோல எந்தவொரு மரணமும் ஏற்படவில்லை என்றும் இது வதந்தி என்றும் கூறியிருந்தனர்.
இதற்கிடையே பாக்யராஜ் இது தொடர்பாக மற்றொரு வீடியோவை இப்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர்," பல ஆண்டுகளுக்கு முன்பு நான் நெல்லிதுறை அருகே ஷீட்டிங்கிற்கு சென்ற போது அந்த ஊர் மக்கள் நிறைய விஷயங்களைச் சொல்வார்கள். ஊருக்குப் பாலம் இல்லை.. ஆற்றைக் கடந்து தான் 500 பேர் வசிக்கும் கிராமத்திற்குச் செல்ல வேண்டி இருக்கிறது என்றெல்லாம் பல விஷயங்களை அவர்கள் சொன்னார்கள். அப்போது தான் இது குறித்துச் சொன்னார்கள்.
அப்போது தான் பவானி ஆற்றில் குளிக்க வருவோரைச் சிலர் காலை பிடித்து இழுத்து பாறையில் சிக்க வைத்துவிடுவார்கள் என்றும் பிறகு அவர்களே வந்து உடலை எடுக்க உதவுவது போல வந்து பணம் பறிப்பார்கள் என்றும் கூறினர். உயிருக்கு மதிப்பின்றி, ஈவு இரக்கமில்லாமல் கல் நெஞ்சம் கொண்டவர்களாக இருக்கிறார்களே என்பதால் தான் நெஞ்சு பொறுக்கவில்லையே என்று நான் வீடியோவை வெளியிட்டனர்.
போலீசாருக்கு முதலில் தப்பு நடக்கும் போது இது குறித்துத் தெரியாது.. அதன் பிறகே கண்டுபிடித்தார்கள் என்று மட்டுமே நான் கூறியிருந்தேன். மற்றபடி போலீசாரை நான் எந்த விதத்திலும் இணைத்துக் கூறவில்லை. மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் இதைச் சொல்லி இருந்தேன். அவ்வளவு தான்
இந்த நேரத்தில் தான் சைதை துரைசாமி மகன் இமாசல பிரதேசத்தில் கார் விபத்தில் சிக்கினார். அவரது டிரைவர் உயிரிழந்த நிலையில், நண்பர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். இருப்பினும், வெற்றி துரைசாமிக்கு என்ன ஆனது என முதலில் தெரியவில்லை. பல நாட்கள் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. அப்போது தனது மகனைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு ஒரு கோடி ரூபாயைத் தர உள்ளதாக சைதை துரைசாமி அறிவித்திருந்தார்.
இந்த நேரத்தில் தான் சிலர் நான் கூறியதையும் இதையும் இணைத்துப் போட்டுவிட்டார்கள். யாரோ சிலர் முதலில் இதை ஆரம்பித்து வைக்க அப்படியே இணையத்தில் பலரும் நான் கூறியதைப் பகிர ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் போலீசாரிடமே இது குறித்தும் கேட்டு இருக்கிறார்கள். அதன் பிறகே வேறு வழியில்லாமல் போலீசாரும் இது குறித்து விளக்கமளித்தனர்.
கடந்த 2 ஆண்டுகளில் இதுபோல எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை என்ற போலீசார், இது வதந்தி என்றும் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். நான் போலீசாரை இதில் எந்த விதத்திலும் தொடர்புப்படுத்தவில்லை. ஆனால், போலீசார் வதந்தி எனக் கூறியதும் மீண்டும் பலரும் என்னிடம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதற்காகத் தான் நான் இந்த தன்னிலை விளக்கத்தைக் கொடுக்கிறேன்.
நான் போலீசாரை எந்த விதத்திலும் சம்பந்தப்படுத்திச் சொல்லவில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் அங்கே சென்ற போது என்னிடம் சொன்னதை மட்டுமே கூறியிருந்தேன். இப்போதும் அதுபோல யாராவது இருக்கலாம் எனச் சாதாரணமாகவே சொன்னேன். போலீசார் குறித்து நான் எதுவுமே சொல்லவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக இதுபோல எதுவும் நடக்கவில்லை என்று போலீசார் கூறினர். ஆனால், நான் விசாரிக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல நடந்ததாகப் பலரும் சொன்னார்கள். இது ஒரு பக்கம் இருக்கட்டும். போலீசார் நான் வதந்தி பரப்புவதாகச் சொல்லி இருக்கிறார்கள். பொதுவாக எந்த குற்றம் நடந்தாலும் போலீசார் அதற்கான காரணத்தைத் தான் பார்ப்பார்கள். நான் அதுபோல வதந்தி பரப்ப எந்தவொரு காரணமும் இல்லை. இதனால் எனக்கு எந்த பலனும் இல்லை.
பாக்யராஜ் பச்சை பொய்.. கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையினிலே.. போலீசுக்கு ஓடியது யார்னு பாருங்க
ஆடியோ வெளியிட்டு விழா போன்ற பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது கடந்த காலங்களில் நடந்தது கேட்டதை எல்லாம் சொல்வோம்.. அதுபோலத் தான் நானும் அந்த பதிவை வெளியிட்டேன். வெற்றி துரைசாமிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. போலீசார் குறித்தும் நான் எதுவும் பேசவில்லை. போலீசார் இதில் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர். இதனால் எனக்குச் சந்தோஷம் தான். நான் வேண்டுமென்ற சொல்லவில்லை. எதார்த்தமாக நடந்த விஷயத்தைச் சொன்னேன். அது இப்படி ஆகிவிட்டது. அவ்வளவு தான்" என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications