தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி என்கிறார் எல்.முருகன் - கிண்டலடிக்கிறார் இயக்குநர் சி.எஸ். அமுதன்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு பா.ஜ.க கூட்டணி ஆட்சியமைக்கும். தமிழக அமைச்சரவையிலும் பா.ஜ.க இடம்பெறும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். இதற்கு கிண்டலடித்து பதிவிட்டுள்ளார் தமிழ் பட இயக்குநர
சென்னை: பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிவிட்டது. பலருக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரவில்லை என்றாலும் கொரோனா பீதியில் பாஸ் ஆனதே ஒரு வெற்றிதான் என்று மாணவர்கள் மனதை தேற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். நம்ம செய்தி அதைப்பற்றியதல்ல தமிழ்பட இயக்குநர் சி.எஸ் அமுதனின் ட்வீட் பற்றியதுதான். மாணவர்களே, மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெறுவது உங்களது தன்னம்பிக்கையைக் குறைக்கக் கூடாது" என்று அவர் பதிவிட்டது பரபரப்பை பற்ற வைத்து விட்டது. அந்த ட்வீட் எதற்காக தெரியுமா? தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அமைச்சரவையில் இடம் பெறும் என்று கூறியதற்குத்தான்.
கொரோனா பரவல் நாடு முழுக்க 10 லட்சம் பேரை தொட்டுப்பார்த்துள்ளது. மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நிவாரணம் என்ற பெயரில் அரசியல் கட்சியினர் இப்போதே தேர்தலுக்குத் தயாராகி விட்டனர். தலைவரின் படங்களைப் போட்டுத்தான் நிவாரண நிதியே கொடுக்கின்றனர்.
ஆட்சியில் உள்ள அதிமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கவும், பத்தாண்டுகள் பதவியில் அமரமுடியாமல் வனவாசத்தில் இருக்கும் திமுக ஆட்சிக்கட்டிலில் அமரவும் போட்டி போட்டு மக்களை சந்தித்து கொரோனா நிவாரணம் கொடுத்து வருகின்றனர். இதில் யார் ஸ்கோர் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள் மக்கள். அதை மனதில் வைத்துதான் சட்டசபை தேர்தல் பணிகளையும் இப்போதே செய்து வருகிறார்.

போராட்ட அரசியல்
"ஆடு மேய்ச்சாப்லையும் இருக்கணும் அண்ணனுக்கு பொண்ணு பாத்தாப்லயும் இருக்கணும்" என்று கிராமங்களின் பக்கம் சொலவடை சொல்வார்கள். அப்படித்தான் ஏதாவது சாக்கு வைத்து போராட்டத்தையும் நடத்தும் அரசியல் கட்சியினர் சந்தடி சாக்கில் சட்டசபை தேர்தலையும் நினைவு படுத்துகின்றனர்.

நமீதாவிற்கும் பதவி
பாஜகவும் தமிழகத்தில் புதிய நிர்வாகிகளை அறிவித்து வருகிறது. எல்லோருமே சினிமா பிரபலங்கள்தான். கவுதமி, நமீதா, சசிகலா புஷ்பா என பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறது. கங்கை அமரன், ராதாரவி, கஸ்தூரி ராஜாவும் கூட பாஜக கட்சி பதவியை அலங்கரிக்கிறார்கள். நடிகர் ஆர்.கே சுரேஸ், இயக்குநர்கள் பேராரசு, பெப்சி சிவா, தீனாவும் கூட கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

போராடிய பாஜக
இந்த நிலையில்தான் நேற்று கருப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. பாஜகவினர் பலரும் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பேசிய பாஜக மாநில தலைவர் எல்,முருகன், இந்துக்கடவுள்களை அவமதிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சொன்னார்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி
அதோடு அரசியலும் பேசிய முருகன், தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாஜக கூட்டணி அமையும் என்றும், தமிழக அமைச்சரவையில் பாஜக இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். அது பாஜகவினரின் தன்னம்பிக்கை வெளிப்படுத்துவதாக நினைத்தாலும் பாஜகவை கிண்டடிப்பவர்களுக்கு அவல் கிடைத்தது போலாகிவிட்டது.

இயக்குநர் சி.எஸ் அமுதன்
சினிமா இயக்குநர் சிஎஸ் அமுதன் இந்த பாஜக தலைவர் எல். முருகன் கருத்தை பதிவிட்டு, மாணவர்களே, மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெறுவது உங்களது தன்னம்பிக்கையைக் குறைக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இனி இதற்கு பாஜகவினரின் ரியாக்சன் எப்படி இருக்கப் போகிறதோ தெரியலையே.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
CJP Protest LIVE: அடுத்தக்கட்ட போரட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி கட்சி! பாஜகவுக்கு நெருக்கடி -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications