யப்பா... இனிமே நான் 'அவுக' பேரை கூட உச்சரிக்கலை... ஆளை விடுங்க... செம டென்ஷனில் சேரன் ட்வீட்
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் தொடங்கிய பஞ்சாயத்து இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இதனால் கடுப்பாகிப் போன இயக்குநர் சேரன், இனிமேல் தான் கவின்-லாஸ்லியா பெயரை கூட உச்சரிக்கப் போவது இல்லை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் சேரன் தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது:

கவின் லாஸ்லியா ரசிகப்பெருமக்களுக்கு.. உங்களுக்கு பிடித்தவர்களை BBவீட்டிற்குள்ளும் சரி வெளிவந்த பின்னும் சரி புண்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை.. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் என கூறினேன்.. அது உங்களுக்கு தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்.
கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை.
— Cheran (@directorcheran) October 19, 2019
இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது.
என் ப்ரச்னைக்கு வரவேண்டாம்.
தகாத வார்த்தைகளால் பேசுவதால் பிரச்சனை தீராது.. இதை வளர்த்து நான் பெரியாளாக விரும்பவில்லை.. நான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள். இருந்தும் பிரச்சனை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன்.
கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்சனைக்கு வரவேண்டாம். இவ்வாறு சேரன் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
