உலகில் அறிவான சாதி பிராமணர்.. பாஸ்கி பேசுறது காமெடியல்ல! அவரே காமெடி - கொந்தளித்த இயக்குநர் நவீன்
உலகத்திலேயே அறிவார்ந்த சமூகம் பிராமணர்கள்தான் என்று தெவித்த நடிகர் பாஸ்கிக்கு இயக்குநர் மூடர்கூடம் நவீன் கூறி இருக்கிறார்
சென்னை: உலகத்திலேயே அறிவார்ந்த சமூகம் பிராமணர்கள்தான் என்று தெவித்த நடிகர் பாஸ்கிக்கு இயக்குநர் மூடர்கூடம் நவீன் கூறி இருக்கிறார். ஆங்கிலம் பேசுவதாலேயே ஒருவன் அறிவாளி ஆகிவிட முடியாது என்று கூறியுள்ள அவர், பாஸ்கி பேசுவது காமடி இல்லை. அவர்தான் காமடி எனவும் விமர்சித்து உள்ளார்.
நடிகரும், சினிமா, கிரிக்கெட் விமர்சகருமான பாஸ்கி, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிராமணர்கள் குறித்து உரையாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது
அந்த வீடியோவில், "படைப்பாற்றலுக்கு பிரம்மன், பிராமின் என்று சொல்வார்கள். இவ்வளவு மூளைகள் இங்கு இருக்கிறது. உலகத்தின் சிறந்த மூளைகள் இங்கு உள்ளது.

பிரம்மன் = பிராமின்
பிராமின், பிரம்மனுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. உலகத்தில் படைப்பாற்றலுக்கு பெயர்போனது பிராமண சமுதாயம். பிராமண சமுதாயம்தான் உலகத்திலேயே உச்சநிலையில் இருக்கும் சமுதாயம். அதில் எந்த ஒரு சந்தேகமும் எனக்கு இல்லை. நிறைய விசயங்கள் பேச வேண்டும். நகைச்சுவையை நீங்கள் வாழ்க்கையில் விட்டுவிடவே கூடாது.

ஐயரா? ஐயங்காரா?
அதை சொல்வதற்கு முன் நான் ஐயர், ஐயங்கார் என்று சொன்னேன் அல்லவா? சின்ன சின்ன விசயங்களில் நமக்குள் சில தவறான புரிதல்கள் வருகின்றன. கார்ட்டூனிஸ்ட் மதனுடைய சகோதரி என் மனைவி. நான் ஐயர். அவர் ஐயங்கார். 'ஏய் நான் கிடைத்ததற்கு நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.' என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார்.

ரிக்சாகாரரும், நாமமும்
நான் சொல்வேன் 'உனக்கு 2 உதாரணங்களை கொடுக்கவா? பிறந்ததில் இருந்தே சென்னை மயிலாப்பூரில் இருக்கிறேன். யாராவது ஒரு ரிக்ஷாகாரர் என்னை பார்த்தால்கூட என்ன ஐயரே.. எங்கே போகனும் என்று சொல்வார். ஐயங்கார் என்று சொல்லவே மாட்டார். இது ஜோக்தான். யாராவது ஏமாற்றிவிட்டால் நல்லா போட்டானா நாமம் என்று சொல்வார்கள். நல்லா விபூதி போட்டானா என்று சொல்ல மாட்டார்கள்' என்றேன்.

சண்டை வேண்டாம்
நீ எங்க அண்ணன் போட்ட பிச்சையினால்தான் நகைச்சுவை கலைஞராகவே ஆனாய். ஐயங்கார்தான் கிங்கு.' இப்படி ஜாலியாக போகும். நான் சண்டைபோட மாட்டேன். ஏன் சொல்கிறேன் என்றால், உலகின் மிகவும் அறிவார்ந்த சமுதாயமாக இருந்துவிட்டு, இப்படி ஒரு மூளையை வைத்துக்கொண்டு நமக்குள் சண்டை வரக்கூடாது என்பது என்னுடைய உணர்வு.

மூடர்கூடம் நவீன் கருத்து
எனவே நாம் பிராமிண் கம்யூனிட்டி என்று அழைக்கப்பட வேண்டும். கம்மி யூனிட்டி இருந்துவிடக்கூடாது." என்றார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்திட்டு இருக்கும் அவர் நடிகர் மூடர்கூடம் நவீன், "ஆங்கிலம் பேசுவதாலேயே ஒருவன் அறிவாளி ஆகிவிட முடியாது என்பதற்கும், மாடர்ன் உடைகள் அணிவதாலேயே ஒருவன் மாடர்ன் நாகரீக சிந்தனை உடையவனாகிவிட முடியாது என்பதற்கும் இந்த காமடி ஒரு உதாரணம். அவர் பேசுவது காமடி இல்லை. அவர்தான் காமடி." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications