"1000 வன்னியர்கள் சூர்யா வீட்டுக்கு போனால்.. காடுவெட்டி குரு மகன் மீது கொலை மிரட்டல் வழக்கு பாயுமா?"
சென்னை: 1000 வன்னியர்கள் நடிகர் சூர்யா வீட்டுக்கு சென்றால் 5 போலீஸாரால் என்ன செய்ய முடியும் என பகிரங்கமாக காடுவெட்டி குருவின் மகன் கனலரசு விடுத்தது கொலை மிரட்டல் மற்றும் வன்முறையை தூண்டும் சட்டத்தின் கீழ் வராதா? என மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன் முகமது அலி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெய்பீம் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசம் அவதூறாக பயன்படுத்தப்பட்டதாக வன்னியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அது போல் உண்மை சம்பவத்தில் பழங்குடியினரை கொடுமைப்படுத்தும் இன்ஸ்பெக்டரின் பெயர் அந்தோணிசாமி என்றபோது அவரது பெயர் இந்த படத்தில் குருமூர்த்தி என வைத்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மன்னிப்பு
இந்த நிலையில் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என வன்னியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகிறது. இதுகுறித்து தனியார் சேனலுக்கு காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் அளித்த பேட்டியில் ஜெய்பீம் பட விவகாரத்தை வன்னிய சமூக மக்கள், மிக பொறுமையாக அமைதியாக கையாண்டு கொண்டிருக்கிறார்கள். சூர்யாவின் வீட்டிற்கு 5 துப்பாக்கி ஏந்திய போலீஸார் காவலுக்கு நிற்கிறார்கள்.

போலீஸார்
1000 வன்னியர்கள் சென்றால் அந்த போலீஸாரால் என்ன செய்ய முடியும். போலீஸாரால் சூர்யாவை காப்பாற்றிவிட முடியாது. இயக்குநர் ஞானவேலையும் காப்பாற்றிவிட முடியாது. ஜெய்பீம் படத்தில் அந்த காட்சியில் காலண்டர் வைப்பதற்கான அவசியமே இல்லை. வன்னிய சமூக மக்களை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
Recommended Video

கண்டனம்
மன்னிப்பு கேட்காவிட்டால் நடிகர் சூர்யா எந்த படத்திலும் நடிக்க முடியாது. எந்த படமும் எடுக்க முடியாது. இயக்குநர் ஞானவேலும் தனது வீட்டை விட்டு வெளியே வர முடியாது என கனலரசன் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த மூடர் கூடம் திரைப்படத்தின் இயக்குநரும் நடிகருமான நவீன் முகமது அலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
|
வீடியோ வெளியிட்டு கண்டனம்
அவர் தனது டிவிட்டரில் அந்த வீடியோவை வெளியிட்டு 'பத்தாயிரம் பேர் சூரியா வாசலில் நின்னா, ஐந்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சூரியாவை காப்பாற்ற முடியாது' என்று பகிரங்கமாக ஒரு தொலைகாட்சியில் மிரட்டுகிறார். இது கொலை மிரட்டல் & வன்முறை தூண்டும் சட்டத்தின் கீழ் வராதா? என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இந்த ட்வீட்டை தமிழக காவல் துறை மற்றும் தமிழக முதல்வரின் ட்விட்டர் பக்கங்களுக்கு டேக் செய்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications