”உடலுறவு”க்கு கல்யாணம் தேவை இல்லை- சீமான் வழியில் தெரிந்து கொண்டேன்.. டைரக்டர் நவீன் ’சர்ச்சை’ ட்வீட்
சென்னை: உடலுறவு கொள்வதற்கு கல்யாணம் தேவை இல்லை என்பதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழியில் தெரிந்து கொண்டதாக திரைப்பட இயக்குநர் நவீன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. நவீன் பதிவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இயக்குநர் நவீன் எக்ஸ் பதிவு: நான் சின்னப்பயலா இருந்தப்ப, எப்படா பெருசாயி கல்யாணம் முடிச்சு உடலுறவு வெச்சிக்குவோம்னு கனவு காணுவேன். ஆனா வெவரம் தெரிஞ்சதுகப்புறம், உடலுறவு வெச்சிக்க கல்யாணம் அவசியம் இல்ல, அண்ணன் சீமான் வழியிலும் அதை அடையலாம் என்று தெரிந்து கொண்டேன். தம்பிகளும் வளருவார்கள். தெளிவு பெறுவார்கள்.

இதற்கு நாம் தமிழர் கட்சியினர் பலரும் மிக கடுமையான சொற்களால் இயக்குநர் நவீனை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதற்கு நவீன் தந்த பதில்: பெரியார் மணியம்மையாரை திருமணம் செய்த காரணத்தை அறியாத உங்கள் நாதக & பாஜக தம்பிகளுக்கான விளக்கம்தான் அது தோழர். மணியம்மையார் திருமணத்தின்போது வயது 30+. இயக்கத்திற்காக தன்னை அர்பணித்தவர். காமம்தான் வேணும்னா கல்யாணம் பண்ணனும்ங்கற அவசியம் இல்ல தம்பினு சொல்ற விளக்கம்.

நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் பதிவு: ஏன் இந்த திரிபுவாதம் நவீன்? பெரியார் காம உணர்வுக்காக திருமணம் செய்தாரென்று இங்கு எவரும் கூறவில்லை. காமம் என்கிற சொல்கூட அந்தப் பின்னூட்டத்தில் இல்லை. எதற்கு சொல்லாத ஒன்றைச் சொன்னதாகத் திரித்துக் கூறுகிறீர்கள்? அண்ணா கேட்டது..: பெரியார் பொருந்தா திருமணம் செய்தார் என்பதும், சொத்துக்கு வாரிசுரிமை ஏற்பாட்டை செய்தார் என்பதும்தான் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அதனைத்தான் அறிஞர் அண்ணா கூறுகிறார். "இளம் பெண்களை வயதானவர்கள் திருமணம் செய்யும் பொருந்தா திருமணத்தை எதிர்த்த பெரியாரே, இவ்வாறு செய்யலாமா?" எனக் கேட்டார். இத்தோடு, "பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு வாரிசுரிமை பற்றிய கவலை ஏன்?" எனக் கேட்டவரும் அண்ணாதான். அப்போது அம்மையார் மணியம்மையாரின் வயது 26 என்று குறிப்பிட்டவரும் அண்ணாதான்.

திமுக விமர்சனம்தான்: பெரியாரின் திருமணத்தை முதலில் விமர்சித்தவர்கள் அண்ணா, கருணாநிதி போன்றவர்கள்தான். அதனைக் காரணமாகக் காட்டியே, இயக்கத்தைவிட்டு வெளியேறி தனி இயக்கம் கண்டார்கள் என்பது வரலாறு. அதனால், பின்னூட்டம் இட்டவரது விமர்சனமும் புதிதில்லை. பல காலத்திற்கு முன்பே, பெரியாரை நோக்கி திமுக வைத்த விமர்சனத்தைத்தான் அவரும் வைத்திருக்கிறார். இதில் காம உணர்வுகள் குறித்து எவரும் பேசவில்லை உங்களைத் தவிர! நீங்கள்தான் புதிதாக ஒரு பொருளைக் கண்டுபிடித்து, அற்பத்தனமாக தனிநபர் தாக்குதல் தொடுத்து உங்கள் வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறீர்கள் நவீன்!













Click it and Unblock the Notifications