Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதிக் கொடுமைகள் நடக்குது..அட்லீஸ்ட் ஒத்துக்கங்க! முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கும் இயக்குனர் பா.ரஞ்சித்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'உங்களில் ஒருவன்' கேள்வி பதில் காணொளியில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அதனை பகிர்ந்துள்ள இயக்குனர் பா.ரஞ்சித், தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையாவது ஒப்புக் கொள்வாரா முதல்வர் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது வழக்கம். அதேபோல் உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதில்களுக்கு வீடியோ மூலம் பதில் அளிப்பார்.

Pa Ranjit MK Stalin Caste Atrocities

அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களில் ஒருவன் வீடியோ மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே பேசினார். அதில் கூட்டணி கட்சிகளின் கருத்து வேறுபாடு, பட்ஜெட், டெல்லி தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேசி இருந்தார்.

"அப்பா": கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், "தலைவர்" என்று அழைக்கிறார்கள். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதனால், "முதல்வர்" என்றும் அழைக்கிறார்கள். இப்போது இருக்கும் இளைய தலைமுறை என்னை "அப்பா" என்று அழைப்பதைக் கேட்கும்போதே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. காலப்போக்கில் மற்ற பொறுப்பில் எல்லாம் வேறு யாராவது வருவார்கள். ஆனால், இந்த "அப்பா" என்ற உறவு மாறாது. அந்தச் சொல், என்னுடைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது என்று சொல்வேன். நான் இன்னும் தமிழ்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது என்று எனக்கு உணர்த்துகிறது!

பட்ஜெட் கூட்டத்தொடர்: தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? தமிழ்நாட்டை முழுவதுமாகப் புறக்கணிக்கிறார்கள்! கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் இல்லை! பெயர்கூட சொல்வதில்லை. மாநிலங்களை ஒப்பிட்டு ஒன்றிய அரசு வெளியிடும் அனைத்துப் புள்ளிவிவரங்களிலும், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கை கொடுக்கிறார்கள்; ஆனால், பணம் மட்டும் தர மாட்டோம் என்று முரண்டு பிடிக்கிறார்கள்; மாநில அரசின் நிதியை வைத்தே திட்டங்களைச் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். மாநில அரசின் நிதியை வைத்து நாம் பல திட்டங்களைச் செய்துகொண்டிருந்தாலும், ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு கிடைத்தால்தானே இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்!

கூட்டணிக் கட்சிகள்: கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப்பதில்லை. ஒரு குடும்பத்தில், பணிபுரியும் அலுவலகத்தில், அனைத்து இடத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது, ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம்தான். 2019-இல் இருந்து ஒன்றாகச் சேர்ந்து தேர்தல் களத்தைச்சந்தித்துக் கொண்டு வருகிறோம். பா.ஜ.க.வை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருப்பது தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை" என பேசியிருந்தார்.

Pa Ranjit MK Stalin Caste Atrocities

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் பேச்சை பகிர்ந்துள்ள இயக்குனர் பா.ரஞ்சித், தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையாவது ஒப்புக் கொள்வாரா முதல்வர் என கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது.

இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? மான்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களே!! தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+