எனக்கு இந்தி தெரியவே தெரியாது! இந்தி எனது திறமையை விட முக்கியமில்லை! பா.ரஞ்சித் பரபர பேச்சு
சென்னை : இந்தி மொழித் திணிப்பு என்பதை எந்த காலத்திலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, எனக்கு இந்தி தெரியவே தெரியாது என இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நட்சத்திரம் கிச்சா சுதீப் ஆகியோர் ட்விட்டரில் இந்தி தேசிய மொழியா என்பது குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.
இந்தி மொழி பிரச்சினை அரசியல் என்பதை தாண்டி சினிமாவிலும் ஆதிக்கம் செலுத்த நினைப்பதாக பலரும் புகார் கூறி வரும் நிலையில், எனக்கு இந்தி தெரியவே தெரியாது இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித்
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ரஞ்சித் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்," திரைத்துறை என்பது அதிக அளவில் வணிகரீதியாக இயங்குவதால் நிறைய பிரச்சனைகள் இருந்தது. இருக்கிறது. அதை சந்தைப்படுத்துவது முதலீடு செய்வது என்பது அதிகார வர்க்கமாக இருந்த சமயத்தில், தலித் மக்களின் வாழ்க்கை குறித்த பேசுவதில் ஆரம்ப காலகட்டத்தில் சில சிக்கல்கள் இருந்தது.

பயம் இருந்தது
முதலில் இது போன்ற படங்களை எடுத்தால் மக்கள் பார்ப்பார்களா இல்லையா வணிகரீதியாக நம்மால் வெற்றி அடைய முடியுமா என்ற பயம் இருந்தது. ஆனால் அந்த பயம் கடந்த பத்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. தலித் மக்களின் வாழ்க்கையை ஏராளமானோர் படமாக எடுத்து இருக்கின்றனர்..எடுக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்தி தெரியாது
மிகவும் வெளிப்படையான தலித் மக்கள் பேசும் வாழ்க்கையை எடுக்க முடியாவிட்டாலும் அதை சார்ந்த படங்கள் வெளிவருகிறது. இந்தி மொழித் திணிப்பு என்பதை எந்த காலத்திலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்கு இந்தி தெரியவே தெரியாது. ஆனால் ஆங்கிலம் தெரியும். ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக பயன்படுத்தி மற்ற மொழிகளில் என்னால் திரைப்படத்தை எடுக்க முடியும் அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.
Recommended Video

திறமை இருக்கிறது
இந்தி எனக்கு தெரியவில்லை என்பதற்காக எனக்கு வேலை வாய்ப்பு அல்லது ஒரு திரைப்படத்தை என்னால் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது இல்லை. எனக்கு திறமை இருக்கிறது எனது திறமை இந்தியை விட முக்கியத்துவம் பெற்றது இல்லை. தமிழ் தேசியம் பேசுபவர்கள் திராவிடத்தை எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. அதனைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என ரஞ்சித் கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications