சாம்சங் ஊழியர்கள் போராட்டம்.. தமிழக அரசுக்கு எதிராக இயக்குனர் பா.ரஞ்சித் பரபரப்பு கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை என இயக்குனர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் சாம்சங் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நீண்ட நாட்களாக தொடர்ந்த நிலையில் அரசு தலையிட்டது. பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் டி.ஆர்.பி ராஜா, தா.மோ. அன்பரசன், சி.வி. கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்திருந்தார்.

samsung tamil nadu government

இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிவடைந்தது.. இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று சாம்சங் இந்தியா சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்திருக்கிறது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக தொழிலாளர்கள் வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அப்போது, காவல்துறையுடன் நடந்த வாக்குவாதத்தில், உதவி காவல் ஆய்வாளரை தொழிலாளர்கள் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 7 தொழிலாளர்களை இன்று காலை வீடு தேடிச் சென்று கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை ஜாமினில் விடுவித்தனர். இதனிடையே தொழிலாளர்கள் அமைத்திருந்த போராட்டப் பந்தல் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இதனால் கோபம் அடைந்த ஊழியர்கள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினார்கள்.

இதனிடையேஊழியர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவை சிஐடியு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் தடையில்லை என்று கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளது.

இந்த பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, சிஐடியூ நடத்தும் போராட்டத்தை நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை என்றும் தொழிற்சங்கங்கத்தை பதிவு செய்வதற்கு எதிரான மனநிலையில், அரசுக்கு இல்லை. பல தொழிற்சாலைகளில் சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிற்சங்க அங்கீகார கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் கூறுவதை பொறுத்துதான் முடிவெடுக்கப்படும் என்றார்.

இதனிடையே சாம்சங் ஊழியர்கள் போராட்டம் குறித்து பதிவிட்டுள்ள இயக்குனர் பா.ரஞ்சித், "தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அணுகுமுறை.

தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+