என் புருஷனை பிடித்த சனி.. பிரபல இயக்குனரை வளைத்துப் போட்ட சமந்தா? கோபத்துடன் மனைவி போட்ட பதிவு
சென்னை: பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோருவும் நடிகை சமந்தாவும் காதலில் விழுந்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில் ராஜ் நிடிமோருவின் மனைவியான ஷயமலி டே, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனால் சமந்தாவுக்கும் - ஷயமலிக்கும் இடையே மறைமுக யுத்தம் தொடங்கியுள்ளது.
பிரபல நடிகரான நாக சைதன்யாவை பிரிந்த பிறகு, நடிகை சமந்தா திரைத் துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக சில நாட்களாக சினிமா துறையில் கிசுகிசுக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா தனது இன்ஸ்டாவில் பிரபல இயக்குனரான ராஜ் நிடிமோருவின் தோளில் சாய்ந்தபடி 'நெருக்கமாக' செல்பி எடுத்து புதிய தொடக்கம் என பதிவிட்டு இருந்தார். இதனால் காதல் வதந்திகள் தீவிரமானது.

மேலும், சமந்தாவும், ராஜ் நிடிமோருவும் சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு இணைந்து சென்றதால் பரபரப்பு கூடுதலாக அதிகரித்துள்ளது. ஆனால் இருவரும் காதல் குறித்து எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்நிலையில் சமந்தா - ராஜ் நிடிமோரு இணைந்து நடிக்கும் புதிய வெப் சீரிஸான 'Rakt Brahmand: The Bloody Kingdom' எனும் தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் ஆதித்யா ராய் கபூர், ஜெயதீப் அஹ்லாவத், வாமிகா காபி, அலி ஃபசல் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் தான் இயக்குனர் ராஜ் நிடிமோருவின் மனைவி ஷயமலா டே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனி கிரகத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளதோடு. காலம் எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வருகிறது. கர்மா அதனை திருத்துகிறது. பிரபஞ்சம் பணிவை கற்றுக் கொடுக்கிறது" என பதிவிட்டு இருக்கிறார். சமந்தா ராஜ் நிடிமோருடன் நெருக்கமாக இருக்கும் செல்ஃபியை வெளியிட்ட பிறகு இந்த பதிவை அவர் பதிவிட்டு இருக்கிறார்.

ராஜ் நிடிமோருவும், ஷயமலாவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. ராகேஷ் ஓம் பிரகாஷ் மெகரா, விஷால் பரத்வாஜ் உள்ளிட்ட இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஷயமலா என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவும் இயக்குனர் ராஜ் நிடிமோருவும் காதலில் இருப்பதாக முதலில் வதந்தி கிளம்பிய போது இதேபோல ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் இந்த நிலையில் அவரது இரண்டாவது பதிவு சமந்தா இடையே மறைமுக மோதல் இருப்பதை வெளிக் கொண்டு வந்துள்ளது.
தமிழில் பானா காத்தாடி மூலம் திரையுலகில் அறிமுகமான சமந்தா, அதற்கு பிறகு தெலுங்கு, கன்னடம் என பல மொழிகள் நடித்தார், சிரஞ்சீவி, விஜய் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடனும் கரம் கோர்த்தார். இந்த நிலையில் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை சமந்தா திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளில் இந்த ஜோடி பிரிந்தது.
அதற்கு பிறகு மீண்டும் சினிமா துறையில் கவனம் செலுத்திய சமந்தா மையோசிடிஸ் எனும் அறிய வகை தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இதற்கு இடையே இயக்குனர் ராஜ் உடன் சமந்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நிலையில் இருவரும் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவருக்கு போட்டியாக சமந்தாவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications