திருமாவளவன் மீது எனக்கு எப்போதுமே பொறாமை உண்டு! இயக்குநர் ரஞ்சித் ஓபன் டாக்!
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் மீது தனக்கு எப்போதுமே பொறாமை உண்டு என இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் திருமாவளவன் பற்றி இயக்குநர் ரஞ்சித் பேசியதாவது;

" பல தலைவர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் மக்களுக்காகத் தனது வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல. ரொம்ப முக்கியமானது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததிலிருந்து தூங்குவது வரை, மக்களுக்காகவே பேசி, அவர்களுக்காகவே சிந்தித்து, அவர்களின் நலன்களை பற்றி யோசித்து தன்னுடைய நலன்களை கூட பார்க்காமல் இருக்கிறார் அண்ணன் திருமா. அவர் மேல் ஒரு பொறாமை கூட உண்டு. ஏனென்றால் நான் ஒரு வித்தியாசமான வாழ்க்கை முறை வாழ்கிறேன். இலக்கிய தளத்திலிருந்து சினிமாவில் இயங்குகிறேன்.''
'' எனக்கு சில விருப்பங்களும், ஏக்கங்களும் இருக்கின்றன. கலையின் வழியால் என்னை அறிந்து கொண்டேன். அதே கலையின் வழியாக நான் யார் என்பதை சொல்ல வேண்டும் என தோன்றியது. ஆனால் திருமா அண்ணன் தேர்ந்தெடுத்த செயல் வடிவம், தன் மக்களுக்காக தன்னை ஒப்புவித்தல் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று. அந்த பொறாமை எப்போதுமே அண்ணன் மேல் உண்டு. எல்லாராலும் அது செய்ய முடியாது. அப்படியிருந்ததினால் தான் வெல்லும் ஜனநாயகம் என்ற மிகப்பெரிய மாநாட்டை நடத்தி பல லட்சம் மக்களை திரட்டியிருக்கிறார்.''
''இந்தியாவே அசந்து போகிற அளவிற்கு இளைஞர்களை திரட்டியுள்ளார். அந்த காட்சியை பார்க்கும் போது நமக்கே ஒரு எழுச்சி வருகிறது. டாக்டர்.அம்பேத்கர், பௌத்தத்தை தழுவிய போது அவ்வளவு பெரிய கூட்டத்தை உருவாக்கினார். அந்த கூட்டத்திலும் இந்த கூட்டத்திலும் எங்கேயுமே எந்த வன்முறையும் அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்து, மிகப்பெரிய கூட்டம், படை எங்களிடமும் இருக்கு, நாங்கள் சாதாரண ஆள் கிடையாது. அதே சமயம் கட்டுப்பாடாக இருக்கிறோம். எங்களுக்கென்று பண்பாடு இருக்கு, அது ஒடுக்குமுறையை எதிர்க்கிற பண்பாடு என இந்திய தமிழக அரசியலில் ரொம்ப தெளிவாக சொல்லியிருக்கிறார். ''
''சினிமா திரைப்படங்களில் வரும் மாஸ் காட்சி போல நிகழ்த்தி காட்டினார். தன்னை பற்றி யார் பாராட்டுவார்கள், தூற்றுவார்கள், யார் கூட நிற்பார்கள், நிற்கமாட்டார்கள் என நினைக்காமல் கட்சி மீதும் மக்கள் மீதும் இருக்கிற அன்பும் மன உறுதியும் தான் அண்ணனை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கு. அவர் எடுத்திருக்கிற இன்னொரு முடிவு தேர்தலில் பானை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்பது.
அது ரொம்ப முக்கியமானது. அவர் போட்டியிடுகின்ற தொகுதிகளிலும் அண்ணன் மிகப் பெரிய வெற்றியடைய நாம் ஆதரவாக நிற்க வேண்டும்"
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications