மோடியின் தொலைநோக்கு பார்வை.. அம்பேத்கரோடு இளையராஜா ஒப்பிட்டது தப்பில்ல - எஸ்.ஏ.சந்திரசேகர்
சென்னை: அம்பேத்கருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பாராட்டி எழுதி இருந்தது தவறில்லை என நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பாராட்டியுள்ளார்.
மோடியை இளையராஜா பாராட்டியதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ட்விட்டரில் இளையராஜாவுக்கு எதிராக ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகின.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், இயக்குநர் மாரி செல்வராஜ் போன்றோர் இளையராஜாவின் கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். மறுபக்கம் பாஜகவினர் இளையராஜாவின் கருத்தை பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து
இந்த நிலையில் இளைஞராஜாவின் கருத்துக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவளித்துள்ளார். "இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா பேசியதில் எந்த தவறும் இல்லை." என்பது எனது தனிப்பட்ட கருத்து." என்றார்.

என்ன சொன்னார் இளையராஜா?
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயர் கொண்ட புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்த புத்தகத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அதில் அவர், "நதி நீர், பாசனம் தொடர்பான கொள்கை முடிவுகளை அண்ணல் அம்பேத்கர் வகுத்தார் என பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக ஒரு செய்தியை நான் படித்தேன். 2016 ஆம் ஆண்டு முதலீட்டாளர் மாநாட்டில் நதி நீர் மற்றும் பாசனம் குறித்த அமைப்புகள் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய பங்கேற்றவர் என்பேத்கர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.

அம்பேத்கர் - மோடியின் கருத்தும் சிந்தனையும் சந்திக்கும் இடம்
அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தை அமல்படுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் நாட்டின் வளர்ச்சிப்பாதை, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்தும் சிந்தனையும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயன்று இருக்கிறது.

முத்தலாக் சட்டத்துக்கு பாராட்டு
பிரதமர் மோடி அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்து இருப்பதால் கிராமபுற பெண்கள் படிப்பை தொடர முடியும். இலவச எரிவாயு திட்டம், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்களே நினைவுக்கு வருகின்றன. குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தாலும் முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தின் மூலமாகவும் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இதனை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்.
Recommended Video

அம்பேத்கர் மோடிக்கு இருக்கும் ஒற்றுமை
அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டனர். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது. பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் சரியான அஞ்சலி. இந்த புத்தகம் விடுதலை போராட்ட வீரர்கள் கனவின்படி புதிய இந்தியா எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கிறது. நம் மண்ணின் சிறந்த மைந்தனின் பெருமையை வெளிக்காட்டுகிறது. இதனை இளைய தலைமுறையினருக்கு நான் பரிந்துரைக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications