மருத்துவமனையில் இயக்குநர் வேலு பிரபாகரன்.. வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.. குடும்பத்தினர் கோரிக்கை!
சென்னை: இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானாதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் வேலு பிரபாகரன் மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரின் உடல்நலம் குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் வேலு பிரபாகரன். 1980களில் வெளி வந்த இவர்கள் வித்தியாசமானவர்கள் என்ற படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமானார். இதன்பின் 1989களில் வெளியான நாளைய மனிதன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2வது படமாக 1990களில் அதிசய மனிதன் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

இயக்கிய இரு படங்களில் வெற்றிப் படமாக அமைந்ததால், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தயாரிப்பில் உருவான அசுரன் மற்றும் ராஜாகிளி உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஆனால் அந்த படங்கள் தோல்வியை தழுவின. பின்னர் நெப்போலியன் நடிப்பில் வெளியான சிவ, சத்யராஜ் நடிப்பில் வெளியான புரட்சிக்காரன் படங்களை இயக்கினார். இந்த படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை.
இதனிடையே ஜெயாதேவி என்பவதை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இதன்பின்னர் 2017ஆம் ஆண்டு தனது 60வது வயதில் தன்னை விட 25 வயது குறைவான நடிகை ஷிர்லே தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது நடிகை ஷிர்லே தாஸ்-க்கு 35 வயதாகி இருந்தது. இவர் வேலு பிரபாகரனின் காதல் கதை என்ற படத்தில் நடித்திருந்தார். அப்போது இருவரும் காதலிக்க தொடங்கினர்.
தொடர்ந்து 60 வயதில் வேலு பிரபாகரன் 2வது திருமணம் செய்து கொண்டது விவாதமாகியது. ஆனால் வேலு பிரபாகரன் தனது வாழ்வில் கவனம் செலுத்தி வந்தார். தொடர்ந்து இயக்கத்தைவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். இவரின் நடிப்பில் பீட்சா 3, வெப்பன், கஜானா, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் உள்ளிட்ட படங்கள் வெளியானது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வேலு பிரபாகரனுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதன்பின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலு பிரபாகரன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி வேலு பிரபாகரன் காலமானாதாக தகவல் வெளியாகியது. தற்போது விசாரித்த போது, வேலு பிரபாகரன் மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரின் உடல்நலம் குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications