Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமதாஸின் அதிரடி முடிவு.. அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை? தைலாபுரத்தில் முக்கிய ஆலோசனை.. பரபர பாமக

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாக்டர் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க 16 குற்றச்சாட்டுகளுடன் ஒழுங்கு நடவடிக்கை குழு பாமக நிறுவனர் ராமதாசிடம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில், அவரிடம் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.. மேலும், அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இன்று நடைபெறும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 9ம் தேதி மாமல்லபுரத்தில், அன்புமணி தலைமையில் நடந்த பாமக பொதுக்குழுவில், அவரது தலைவர் பதவியை ஒரு வருடத்துக்கு நீட்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் நேற்று முன்தினம் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ராமதாசின் மூத்த மகள் காந்திமதி உள்ளிட்ட 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

PMK anbumani ramadoss Thailapuram Thottam

பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராமதாஸே கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருப்பார் என்று , தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

37 தீர்மானங்கள்

"பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியின் தலைவராக கடந்த 30-05-2025 முதல் செயல்படுவதை அங்கீகரித்தும், சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கு முடிவுகளை எடுக்கவும், தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் முழு அதிகாரத்தையும் ராமதாசுக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தார். 2024 டிசம்பர் 28ல் நடந்த பொதுக்குழுவில் மைக்கை துாக்கி போட்டு, ராமதாசை எதிர்த்து பேசியது, பனையூரில் தனி அலுவலகம் அமைத்தது, ராமதாஸ் கூட்டிய கூட்டத்திற்கு மாவட்டச் செயலர்களை வரவிடாமல் தடுத்தது, ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டு கட்சிக்கு களங்கத்தையும், குழப்பத்தையும், பிளவையும் அன்புமணி ஏற்படுத்தியது, ராமதாஸ் இருக்கைக்கு அருகே ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டது, அன்புமணி நடத்திய பொதுக்குழுவில் காலி நாற்காலி போட்டு ராமதாசை அவமானப்படுத்தியது உட்பட, அன்புமணி மீது, 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சஸ்பெண்ட் நோட்டீஸ்

அந்த அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாசிடம் சமர்ப்பித்த நிலையில் நேற்று அன்புமணியிடம் விளக்கம் கேட்டு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. மேலும் மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும், இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது...

இதனிடையே, பாமக செயல் தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணியை நீக்கம் செய்யவும் ராமதாஸ் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்புமணி மீது நடவடிக்கை?

காரணம், ஏற்கனவே விழுப்புரத்தில் கடந்த 20ம்தேதி நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்ற பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார் (மயிலம்), சதாசிவம் (மேட்டூர்), வெங்கடேஸ்வரன் (தர்மபுரி) மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோருக்கு கட்சி நன்னடத்தை விதிகளை மீறியதாக ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது..

ஆனால், இதுவரை அதற்கு யாருமே இதுவரை நேரிலோ, கடிதம் மூலமாகவோ விளக்கம் எதுவும் தரவில்லை.. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்வதாக தைலாபுரம் வட்டாரங்கள் கூறிவரும் நிலையில், இப்போது அன்புமணிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.. இதற்கும் பதில் அளிக்காத பட்சத்தில் அவர் மீதும் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள்.

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்

இந்த பரபரப்புக்கு இடையில்தான், பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் இன்று அதாவது 19ம் தேதி தைலாபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருள் எம்எல்ஏ உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் ராமதாஸை சந்தித்து முக்கிய ஆலோசனையை நடத்த உள்ளதாகவும், இதில் அன்புமணி மீதான புகார்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த கூட்டம் ராமதாஸ் தலைமையில் காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.. இந்த ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான முடிவை ராமதாஸே அறிவிப்பார் என்றும் கட்சி வட்டார்ங்கள் கூறுகின்றன.

ஒருபக்கம் விளக்க நோட்டீஸ் தரப்பட்டுள்ள நிலையில், மற்றொருபுறம் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டமும் இன்று நடப்பதால், கட்சிக்குள் பெரும் சலசலப்பு நிலவி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+