நீங்க யாரு? எப்படிப்பட்டவர்னு தெரியனுமா? படத்தில் முதலில் என்ன தெரியுதுன்னு சொல்லுங்க போதும்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகின்றது என்று சொல்லுங்கள்.. இதை வைத்து உங்கள் கேரக்டர் எப்படி இருக்கும் என கண்டுபிடிக்க முடியும். கடலின் நடுவில் அமைதியான ஒரு தீவு இருப்பது போல் உங்கள் கண்களுக்கு தெரிகின்றதா.. இல்லை இது ஒரு பெரிய பூனையின் தலை போல் தெரிகிறதா?.. சொல்லுங்கள் போதும்!
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகின்றன. புதிர் போடும் இல்யூஷன் படங்கள் போல, கேரக்டர் ஆப்டிகல் இல்யூஷன்களுக்கும் தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஆப்டிகல் இல்யூஷன்
ஒரு படத்தை பார்க்கும் விதம், அதை புரிந்து கொள்ளும் திறன் ஆகியனவற்றை வைத்து ஒரு நபரின் ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்கள் என்ன என ஓரளவு கணித்து விடலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். எனவே நம்முடைய கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் பலரும் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து விடையளிக்க ஆர்வம் காட்டுவதைக் காண முடிகிறது.
சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். நாம் இன்று பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள்.. அதாவது முதலில் உங்கள் கண்களுக்கு பூனை தெரிகின்றதா அல்லது தீவு போன்று உங்களுக்கு தெரிகிறதா என்று சொல்லுங்கள்.. அதை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருக்க வாய்ப்புள்ளது என்பதை இங்கே அறியலாம்.
தீவை முதலில் பார்த்தால்..
நீங்கள் மற்றவர்களுடன் பழகுவதை விரும்பும் ஒரு அன்பான, நட்பான நபராக இருக்கலாம். நீங்கள் நட்புகளைப் பற்றி மிகவும் அக்கறை கொள்வீர்கள். நண்பர்களுக்காக என்ன உதவிகளை வேண்டுமென்றாலும் செய்வீர்கள். மற்றவர்களை மகிழ்விக்க நீங்கள் உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். மற்றவர்களுக்கு உதவ தயங்க மாட்டீர்கள்.
தீவை முதலில் பார்ப்பவர்கள் கொஞ்சம் தயக்கம் உடையவர்களாகவும், கூச்ச சுபாவம் கொண்டவராகவும் இருக்கலாம். குறிப்பாக மன அழுத்தத்தில் இருக்கும்போது, முக்கியமான விஷயங்களில் அதிகமாகச் சிந்திக்கலாம்.. தனிமையை தேடும் நபராக இருக்கலாம்.
பூனையின் தலையை முதலில் பார்த்தால்..
நீங்கள் அமைதியான நபராகவும் அதே சமயத்தில் மற்றவர்களிடம் நடிக்காமல் வெளிப்படைத் தன்மையாக இருப்பீர்கள். எதற்கும் அவ்வளவு எளிதில் கோபப் படமாட்டீர்கள். எதையும் ஆல் இஸ் வெல் என்று சொல்லக்கூடிய நபராக இருப்பீர்கள். எப்போதும் துருதுருவென ஆக்டிவாக இருப்பீர்கள்.
மிக கடினமான, சங்கடமான சூழ்நிலைகளிலும் கூட சிந்தித்து சரியான முடிவுகளை எடுக்கும் திறன் படைத்தவர்களாகவும், மற்றவர்களை எளிதில் மகிழ்விக்கக் கூடியவராகவும் இருப்பீர்கள். ஆனால் தவறு என்று தெரிந்தால், மிகவும் அமைதியானவராக நீங்கள் இருந்தாலும், உங்கள் கோபம் எரிமலை மாதிரி வெடிக்கும்.
நீங்கள் முதிர்ச்சியானவர், சிந்தனைமிக்கவர், மற்றவர்களின் பார்வையிலிருந்து விஷயங்களைப் பார்க்க முயற்சிப்பீர்கள். நீங்கள் தவறு செய்திருந்தால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கும் குணம் படைத்தவர்களாக இருப்பீர்கள். இது உங்களை வலிமை மிக்கவராக வைத்திருக்கும்.












Click it and Unblock the Notifications