குற்ற வழக்கை மறைத்ததாக டிஸ்மிஸ்ஸான பயிற்சி காவலர்.. மீண்டும் பணி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: குற்ற வழக்கை மறைத்ததாக பயிற்சியின் போது காவலரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இரு வாரங்களில் மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை கீழ்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் அரவிந்த்ராஜ். இவர், கடந்த 2013-ம் ஆண்டு நடந்த 2-ம் நிலை காவலர் பதவிக்கான தேர்வில் வெற்றிப்பெற்றார். 2013-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி பயிற்சிக்கு சென்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் கீழ்பாக்கம் குடியிருப்பில் நின்ற போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்த வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்த்து கைது செய்யப்பட்டார்.

இதை மறைத்து அவர் போலீஸ் பயிற்சியில் கலந்துக் கொண்டதாக கூறி, அவரை பணி நீக்கம் செய்து ராஜபாளையம் 11-வது பட்டாலியன் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அரவிந்த்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டதால், போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் சிலருக்கு ஏற்பட்ட பொறாமை காரணமாக, நடக்காத சம்பவம் தொடர்பான வழக்கில் தன் பெயரையும் சேர்த்து விட்டதாக கூறியுள்ளார்.
இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என, தன்னை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால், பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழ்நாடு காவலர் சார்பு பணி விதிகளின்படி. பயிற்சியில் இருக்கும் ஒருவரை பணி நீக்கம் செய்யும் முன்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்து, அவரது விளக்கத்தை பெற்ற பின்னரே இறுதி முடிவு எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், மனுதாரர் விவகாரத்தில் அதுபோல விளக்க நோட்டீஸ் கொடுக்கவில்லை. அவரது கருத்தையும் கேட்காதது, இயற்கை நீதிக்கு எதிரானது எனக் கூறி, பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, 2 வாரங்களில் மீண்டும் பணியில் சேர்த்து பயிற்சி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications