Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழிவாங்கிய ஜெயலலிதா.. சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி தரப்பு உயர்நீதிமன்றத்தில் பரபர வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் இந்த வழக்கு என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பதிவு செய்யப்பட்டது என பொன்முடி தரப்பில் பரபரப்பான வாதம் முன்வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் இதற்கு முன்பு மறைந்த திமுக முதல்வர் கருணாநிதி அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்துள்ளார்.

Disproportionate asset case: Its a political revenge by Jayalalithaa, Ponmudi advocate says in high court

தமிழ்நாட்டில் கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடந்தது. அப்போது பொன்முடி கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தார். இந்த சமயத்தில் பொன்முடி 1 கோடியே 36 லட்சம் அளவுக்கு வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கடந்த 2002ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு என்பது விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதையடுத்து அந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. வேலூர் நீதிமன்றம் வழக்கை விசாரித்த நிலையில் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை நீதிபதி வசந்த லீலா கடந்த ஜூன் மாதம் வழங்கினார்.

இதனால் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதற்குள் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக தெரிவித்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக பொன்முடி தரப்பு வாதங்களை முன்வைக்க உயர்நீதிமன்றம் கூறியது. இதையடுத்து இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணை நடந்தது. அமைச்சர் பொன்முடி தரப்பில் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ வாதம் செய்தார். அப்போது அவர், ‛‛விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டதால் தான் உயர்நீதிமன்றம் இதனை தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. ஆனால் நீதிமன்றத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எங்கள் தரப்பில் வைக்கப்படவில்லை.

மேலும் வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றும்போது கருத்து கூட கேட்கப்படவில்லை. அதோடு வேலூர் நீதிமன்ற நீதிபதி 4 நாளில் தீர்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த வழக்கை 9 மாதங்கள் விசாரணை நடத்தினார். அதோடு அரசியல் எதிரிகள் யாரோ எழுதிய கடிதத்தால் தான் விழுப்புரத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை பதிவுத்துறை எங்களிடம் வழங்க வேண்டும்'' என்றார்.

இதனை கேட்ட நீதிபதி நிர்வாக ரீதியாக இப்போது எதையும் கூற முடியாது. மனுவாக தாக்கல் செய்யுங்கள். பார்க்கலாம் என்றார். இதையடுத்து மீண்டும் என்ஆர் இளங்கோ வாதம் செய்தார். அப்போது, ‛‛சட்டசபையில் பொன்முடியின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ஜெயலலிதாவால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

இதையடுத்து பொன்முடிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ‛இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 27 ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்'' என்றார். இதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார். அதாவது எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை வேகமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி மறுத்தார்.

அதன்பிறகு இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதி கேட்டார். அதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛வேலூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆராய்ந்து வருகிறோம். அதற்குள் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரிக்கிறது'' என்றார். இதை கேட்ட உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனக்கூறி நவம்பர் 27 ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+