தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல் ரூ2,500 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல் ரூ2,500 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் ரொக்கம், முழு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலம் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதன்படி ஜனவரி 4-ஆம் தேதி நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்கு தேவையான கரும்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரேஷன் கடைகளில் திராட்சை, முந்திரி, ஏலம் உள்ளிட்ட பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரூ2,500 ரொக்கம் வழங்கும் விவகாரம் ஏற்கனவே சர்ச்சையானது.
சட்டசபை தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சி பிரமுகர்களே இந்த உதவி தொகையை வழங்குவது போல டோக்கன் அடித்து விநியோகித்தது நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications