தமிழகத்தில் நீடிக்கும் கனமழை.. முன்னெச்சரிக்கையாக இருங்கள்.. ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுரை!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
இதற்கு அருகாமையில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து வருகிறது.

என்ன மழை
தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று கோவையில் மாலையில் இருந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது.திருப்பூர், சேலம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது. திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர், வேதாரண்யம், முத்துப்பேட்டை, திருச்சி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மூன்றாவது நாளாக தொடர்ந்து மழை பெய்கிறது.

என்ன எச்சரிக்கை
தமிழகத்தில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அணைகள், ஆறுகள், குளங்களை கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தென் மாவட்டம்
அதேபோல் தென் மாவட்டங்கள் மழையால் அதிகமாக பாதிக்க உள்ளது. கடலோர மாவட்டங்களில் அதிகமாக மழை பெய்யும். இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஆட்சியர்கள், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை ஏற்பாடு செய்ய வேண்டும்.

கடல்
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை கண்காணிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை கண்காணித்து தகவலை உடனுக்குடன் முதல்வருடன் பகிர வேண்டும். மீட்பு படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications