திடீர் மூச்சு திணறல்.. மருத்துவமனையில் திவாகரன் அனுமதி.. பரபரப்பில் மன்னார்குடி..!
திவாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது
சென்னை: அந்த பக்கம் சசிகலா பிரச்சனை.. இந்த பக்கம் தினகரன் பிரச்சனை என சிக்கி தவித்து வரும் திவாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாம்..!
ஜெயலலிதா எங்கு சென்றாலும் கூடவே சசிகலா செல்வது வழக்கம்.. இவர்கள் 2 பேருக்கு பாடிகார்டாக கூடவே செல்பவர்தான் திவாகரன்..!
பாதுகாவலன் என்ற கட்டத்தையும் தாண்டி, அரசியல் ரீதியாகவும் செயல்பட ஆரம்பித்தவர்.. எம்ஜிஆர் இறந்தபோது, அதிமுக ஜெ.அணி, ஜானகி என ரெண்டாக உடைந்தது.

பாதுகாப்பு
இது ஜெயலலிதாவுக்கு மிக முக்கியமான காலகட்டமாகும்.. தன்னை அதிமுகவில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.. மிகப்பெரிய தலைகள் ஜானகி பக்கம் இருந்தபோது, ஜெ.பக்கம் ஒருசில ஜாம்பவான்களே இருந்தனர்.. அந்த நேரத்தில், முதல் முறையாக மன்னார்குடியில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தவர் திவாகரன்தான். இதை ஜெயலலிதா எப்போதுமே மறந்ததில்லை.

தகராறு
ஜெ.மறைந்தபிறகு தினகரன் சொந்தமாக கட்சி ஆரம்பித்தார்.. ஆனால், இது திவாகரனுக்கு பிடிக்கவில்லை.. அண்ணனும், தம்பியும் சண்டை போட்டுக் கொண்டனர்.. பிறகு, திவாகரன் அண்ணா திராவிட கழகம் என்ற கட்சியை தனியாக தொடங்கினார்... இதை கேள்விப்பட்டு ஜெயிலில் இருந்த சசிகலா கொந்தளித்தார்.. திவாகரன் எனது சகோதரனே இல்லை என்றுகூட சொன்னார். இந்த கோபம் இன்னமும் இருக்கிறது..

இணக்கம்?
தினகரனும் சேரவில்லை சசிகலாவும் இணையவில்லை.. சசிகலாவைசென்று தினகரனும் இதுவரை சந்திக்கவும் இல்லை.. இது சம்பந்தமாக இவர்களுக்குள் இணக்கம் விரைவில் வரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.. இந்நிலையில், திவாகரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.. இவரது வீடு திருவாரூர் சுந்தரகோட்டையில் உள்ளது.

தொண்டை வலி
எப்படி தொற்று வந்தது என்று தெரியவில்லை.. ஆனால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... கடந்த சில தினங்களாகவே காய்ச்சல் இருந்திருக்கிறது.. பிறகு, தொண்டை வலி வந்துள்ளது.. இதற்கு பிறகு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.. அப்போதுதான் திவாகரனுக்கு கடந்த ஓரிரு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது.

சிகிச்சை
அதனை தொடர்ந்து நேற்று இரவு அவருக்கு தொண்டைவலி மற்றும் லேசான மூச்சு திணறல் இருந்தது. இதற்கு பிறகு தான் திருச்சியில் டெஸ்ட் எடுத்துள்ளனர்.. தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது,.. பிறகு ஆம்புலன்ஸ் மூலமே சென்னைக்கு அழைத்து வந்து, இங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இப்போது தீவிரமான சிகிச்சையும் திவாகரனுக்கு தரப்பட்டு வருகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications