மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்
சென்னை: தமிழக முதல்வர் விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ஜூன் 15 (நாளை மறுநாள்) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் விஜய், தனது மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து மீண்டும் வாழ்வது தொடர்பாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் 'டாப்' நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் நுழைந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றது. விஜய் முதல்வராகி உள்ளார்.

இதற்கிடைய தான் தேர்தல் நெருங்கிய சமயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவது மனைவி சங்கீதா நீதிமன்றத்தை நாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
விஜய்க்கும், நடிகை ஒருவருக்கும் கள்ள உறவு இருப்பதாகவும், கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்த உறவு தொடர்வதாகவும் சங்கீதா குற்றம்சாட்டி இருந்தார். இந்த உறவை கைவிட கூறியும் அவர் அதனை விஜய் மறுத்ததோடு, சங்கீதாவிற்கு பொருளாதார ரீதியாக விஜய் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சுமூகமாக பிரிய எடுக்கப்பட்ட முயற்சியை விஜய் கண்டுக்கொள்ளாததால் நீதிமன்றத்தை நாடி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு செங்கல்பட்டு 1வது குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு மீண்டும் நாளை மறுநாள் (ஜூன் 15) விசாரணகை்கு வர உள்ளது. விஜய் முதல்வரான பிறகு முதல் முறையாக இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வர உள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணை அதிக கவனம் பெற உள்ளது.
இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. விஜய் - சங்கீதா ஆகியோர் மீண்டும் ஒன்றாக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதுதொடர்பாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அதில் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் மீண்டும் இணைந்து வாழ்வது பற்றி பரிசீலனை செய்து வருகின்றனர். குடும்ப காரணங்களுக்காக மீண்டும் இணைய விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் திருமண உறவை மீண்டும் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக விஜய்- சங்கீதா இடையே விஜய்யின் தாய் சோபா பாலமாக இருந்து வருகிறார். இவர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விஜய் ஜூன் 22ம் தேதி பிறந்தநாள் விழாவை கொண்டாட உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மீண்டும் விஜய் - சங்கீதா இணைய வேண்டும் என்று விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் விஜய் - சங்கீதா ஆகியோர் மீண்டும் இணைவது தொடர்பான செய்திகள் ஆங்கில ஊடகங்களில் வெளியாகி இருந்தாலும் கூட அதுபற்றி இருவர் தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் ஜூன் 15 ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள வழக்கு இன்னும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தால் அன்றைய தினம் அதுபற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் நாளை மறுநாள் வரும் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications