திரையில் டான்ஸ் ஆடுறவன் தலைவர் கிடையாது! தரையில் இறங்கி அடிக்கிறவர்தான்.. திவ்யா சத்யராஜ் பரபர பேச்சு
சென்னை: யோகி பாபு சார் கூட கியூட்டா இருக்கிறார். அதற்காக நாளைக்கு அவர் கட்சி ஆரம்பித்தார் என்றால் நான் அவர் மக்கள் பணி எப்படி செய்கிறார் என பார்த்துவிட்டு தான் ஓட்டு போடுவேன் என திவ்யா சத்யராஜ் கூறினார். மேலும் திரையில் வந்து டான்ஸ் ஆடுகின்றவர் தலைவர் கிடையாது.. தரையில் இறங்கி அடிக்கிறார் பாருங்க அவர் தான் தலைவர்.. என்றும் விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.
நடிகர் சத்யராஜின் மகளும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளருமான திவ்யா சத்யராஜ் விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பேசினார். திவ்யா சத்யராஜ் கூறியதாவது:-

திரையில் வந்து டான்ஸ் ஆடுகின்றவர் தலைவர் கிடையாது.. தரையில் இறங்கி அடிக்கிறார் பாருங்க அவர் தான் தலைவர்.. எவன் செத்தால் எனக்கு என்ன என்று படையப்பா படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் மேடம் போல ஆபீஸ் ரூமில் இருந்து லாஜிக்கே இல்லாமல் ஸ்லோமோஷன் ல பேசுகின்றவர் தலைவர் கிடையாது.
அன்பில் மகேஷ் ஏன் அழுதார் என கேக்குறாங்க
துபாய் பயணத்தை கேன்சல் செய்துவிட்டு மக்களுக்காக ஓடி வந்தார் பாருங்க அவர் தான் தலைவர். கரூர் சம்பவத்தை பற்றி லாஜிக்கே இல்லாமல் புது கட்சியில் இருந்து வந்தவங்க சில கேள்விகளை கேட்டாங்க.. ஏன் செந்தில் பாலாஜி கரூர் சம்பவத்தின் போது ஆஸ்பத்திரிக்கு எப்படி உடனே வந்தார் என கேட்டாங்க.. அவருடைய எபிசென்சிய காண்பிக்கிறது.
ஏன் அன்பில் மகேஷ் அண்ணா அழுதார் என்று கேட்கிறாங்க.. ஏன் என்றால் அவருக்கு மக்கள் மீது இருக்கிற கருணையை காண்பிக்கிறது. ஏன் ஜோதிமணி மேடம் ஓடி வந்தார்கள்.. ஜோதிமணி மேம் ஓடி வந்தது அவங்களுக்கு மக்கள் மீது இருக்கிற கருணையை காண்பிக்கிறது.
கொஞ்சம் லாஜிக்கோடு பேசுங்க..
சும்மா லாஜிக்கே இல்லாமல், நீங்க பெர்மிசன் கொடுக்கவில்லை. கொடுக்கவில்லை என சொல்கிறார்கள். ஏன் எல்லாத்தையும் எங்க கிட்ட கேட்டா செய்யுறீங்க.. நாங்க என்ன பிரின்ஸ்பல்.. நீங்க எல்.கே.ஜி ஸ்டூடண்டா.. எல்லாத்தையும் எங்க பெர்மிசனோடு தான் பண்றீங்களா.. எனவே கொஞ்சம் லாஜிக்கோடு பேசுங்க..
காவல்துறை எதுக்கு இருக்காங்க.. நம்மளை பாதுகாக்கிறதற்கு.. ஆனால் காவல்துறை மீது பால் வீசுறுது.. மரத்து மேல ஏறுகிறது.. காவல்துறையை கடித்து வைக்கின்றது.. இதையெல்லாத்தையும் ஒரு தலைவர் கண்ட்ரோல் பண்ணனுமா வேண்டாமா.. ஆனால் லாஜிக்கே இல்லாம பேசுறாங்க..
யோகி பாபு கட்சி ஆரம்பித்தால்
நடிகர் யோகி பாபுவோட பெரிய பேன் நான்.. அவரை எவ்வளவு பிடிக்கும் என்று சொன்னால், எனக்கு யோகி பாபு சாரை கடத்துகின்ற அளவுக்கு பிடிக்கும். அதற்காக யோகி பாபு நாளைக்கு கட்சி ஆரம்பித்தார் என்றால்.. அவருக்கு உடனே நான் ஓட்டு போட்டுவிட மாட்டேன்.
அவர் நாளைக்கு மக்கள் பணி எப்படி செய்வார்? எந்த அளவுக்கு செய்வார்? என்பதை பார்த்து தான் ஓட்டு போடுவேன்.. யோகி பாபு சார் க்யூட்டா இருக்கிறார் என்பதற்காக நான் அவருக்கு ஓட்டு போட மாட்டேன்.. ஒரு ரசிகனுக்கும், ஒரு குடிமகனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதை நாம எல்லாரும் புரிஞ்சு வைத்துக்கிடனும் என நினைக்கிறேன்.. இவ்வாறு அவர் கூறினார்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications