தீபாவளிக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. குரோம்பேட்டை டூ தாம்பரம் வரை "வாகன அணிவகுப்பு"
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால் குரோம்பேட்டை டூ தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஆண்டுதோறும் இயக்கி வருகிறது.

அந்த வகையில் சென்னையிலிருந்து வழக்கமாக பேருந்துகள் செல்லும் நிலையில் இன்று கூடுதலாக 1586 பேருந்துகளும் நாளை 1195 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். ஆக மொத்தம் சென்னையில் இருந்து 10,518 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு, பூந்தமல்லி, கேகே நகர், தாம்பரம், மாதவரம் ஆகிய 5 இடங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் பேருந்துகள் இல்லாமல் தங்கள் சொந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்கிறார்கள். இதனால் சாலையில் கார், இரு சக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது குரோம்பேட்டை டூ தாம்பரம் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பரனூர் சுங்கச்சாவடியை தாண்டுவதற்குள் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்த முறை சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு முதலே மக்கள் புறப்பட்டு வருகிறார்கள். மாலை வேளைகளில் நெடுஞ்சாலைகளில் கூட்டநெரிசல் அதிகம் காணப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications