தீபாவளி.. சுவாசிக்கவே சிரமம்.. சென்னையில் மோசமான நிலையை அடைந்த காற்று மாசு! ஷாக் தந்த நம்பர்
சென்னை: தீபாவளியைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு குறியீடு (AQI) 359ஐ எட்டியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஒருசில மாநிலங்களில் பண்பாட்டு வழக்கப்படி இன்று அதிகாலை தீபாவளி கொண்டாடும் பழக்கம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நேற்றே தீபாவளி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் விளைவாக, பட்டாசு வெடித்த காரணத்தால் காற்றின் தரம் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி நாட்களில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. இவ்வாண்டும் அதேபோல சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 250க்கும் அதிகமாக உள்ளது. இந்த நிலை மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. நீண்ட காலம் இந்த மாசடைந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம்.
சென்னையில் காற்று மாசு
சென்னையின் வேளச்சேரி பகுதியில் காற்றின் தரக்குறியீடு 301ஐ தொட்டுள்ளது, இது மிக மோசமான உடல்நலக் கேடு விளைவிக்கும் நிலையாகும். இப்பகுதிகளில் நீண்ட காலம் வசிப்பவர்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெருங்குடியில் 231 ஆகவும், செங்கல்பட்டில் 242 ஆகவும் காற்றின் தரம் பதிவாகியுள்ளது. ஏற்கெனவே நுரையீரல் கோளாறுகள் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்.
புதுச்சேரியில் காற்றின் தரக்குறியீடு 243 ஆகவும், மதுரையில் 132 ஆகவும் பதிவாகியுள்ளது.
காற்றின் தரக்குறியீடு (AQI) வரம்புகள் இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளன:
0-50: இந்த வரம்பு சிறந்த காற்றின் தரத்தைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் குழந்தைகள் அல்லது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்குகூட எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
51-100: இந்த வரம்பு திருப்திகரமான காற்றின் தரமாகும். ஆனால், சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒருசில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம்.
101-200: மிதமான காற்றின் தரத்தைக் குறிக்கும் இந்த வரம்பு, காற்று அவ்வளவு நல்ல நிலையில் இல்லை என்பதைக் காட்டுகிறது. குழந்தைகள், வயதானவர்கள், மற்றும் ஏற்கெனவே நுரையீரல் கோளாறுகள் அல்லது இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
201-300: இந்த வரம்பு காற்றின் தரம் மோசமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. நீண்ட நாட்களுக்கு இந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்குப் பெரிய அளவிலான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
301-400: இது மிகவும் மோசமான காற்றின் தரத்தைக் குறிக்கிறது. இத்தகைய சூழலில் நீண்ட காலம் வாழ்பவர்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுகின்றன. தற்போது சென்னையில் காற்றின் தரம் இந்த நிலையில்தான் உள்ளது.
401-500: இது காற்றின் தரக்குறியீட்டின் மிகக் கடுமையான வரம்பாகும். இந்த நிலையில் உள்ள காற்று, சாதாரணமானவர்களுக்குகூட உடல்நலப் பாதிப்புகளையும், உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு மிகக் கடுமையான உடல்நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
இந்தியாவில், தற்போது மிக மோசமான காற்றின் தரத்துடன் உள்ள முக்கிய நகரங்கள்:
பாட்னா: 405
நொய்டா: 402
டெல்லி: 359
கொல்கத்தா: 355
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications